மருந்தில்லா மருத்துவம் - 2

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஹெல்த்

ம் உடலின் ஏழு சக்கரங்களைப் பற்றியும்,  அதனோடு தொடர்பு உள்ள உடலின் பாகங்களைப் பற்றியும் பார்த்தோம். ஏழு சக்கரங்களில் முதலாவதும், மிக முக்கியமானதுமான சக்கரம், மூலாதாரம். ஏழு சக்கரங்களில் முதலில் தோன்றுவது இந்த சக்கரம்தான். இது, தாயின் கர்ப்பப்பையில், ஏழாவது மாதத்தில் குழந்தைக்கு மலரும். நான்கு சிவப்பு நிற இதழ்களைக்கொண்ட ஒரு மலரைப் போன்ற வடிவுடையது. முதுகெலும்பின் நுனியில் உள்ளது. இதனால் சிசு உயிர்ப்பெறுகிறது. இந்தக் கட்டத்தில்தான், சிசுவின் அசைவைத் தாய் முழுமையாக உணர்வாள். குழந்தையின் ஐம்புலன்களில், செவி கேட்கும் திறன் பெறுகிறது. மூலாதாரம் என்ற பெயருக்கு ஏற்ப, மனித வாழ்வின், ஆரோக்கியத்தின் மூல ஆதாரமாக இந்தச் சக்கரம் விளங்குகிறது.

மூலாதாரச் சக்கரத்தை அட்ரினலின் சுரப்பியுடன் தொடர்புபடுத்துகிறோம். இந்தச் சுரப்பியானது மூலாதாரச் சக்கரத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. மூலாதாரச் சக்கரம் இயங்கிக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் உயிர்ப்புடன் இருக்க முடியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்