வளரும் குழந்தைகள் நலமாக

குடும்பம்

குழந்தைகளுக்குச் சிறு வயதில் சொல்லிக்கொடுப்பதைத்தான், அவர்கள் காலம் முழுக்க பின்பற்றுவர். குழந்தைப் பருவத்தில் இருந்தே சில ஹெல்த்தி விஷயங்களை சொல்லிக்கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு உணவு மற்றும் பொது சுகாதாரம் குறித்துச் சொல்லிக்கொடுக்க வேண்டியவை இதோ...

தண்ணீர் பாட்டில்

பிளாஸ்டிக் மற்றும் பெட் பாட்டில்களில், ரசாயனங்கள் வெளிப்பட்டு நீரில் கலக்கும். எனவே, குழந்தைகளுக்கு இத்தகைய பாட்டில்களில் தண்ணீர் நிரப்பிக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

அலுமினியம், எவர்சில்வரால் செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில்களை குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். முடிந்தவரை பிளாஸ்டிக் பயன்படுத்துவதைத் தவிர்க்க சொல்லித்தர வேண்டும்.

டிஃபன் பாக்ஸ்

அதேபோல, பிளாஸ்டிக்கால் ஆன டிஃபன் பாக்ஸ் நல்லது அல்ல. சூடான உணவுப் பொருட்கள்  பிளாஸ்டிக்குடன் வேதி வினையில் ஈடுபட்டு, மோசமான வேதிப் பொருட்களை வெளியிடும்.

எவர்சில்வரில் செய்யப்பட்ட டிஃபன் பாக்ஸ் நல்லது. தற்போது, ஹாட்பேக் வசதிகொண்ட டிஃபன்பாக்ஸ்களும் கிடைக்கின்றன.

ஸ்நாக்ஸ்


ஸ்நாக்ஸ் என்றவுடன் உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்ற எண்ணெய்ப் பலகாரங்கள், சாக்லேட்கள், முறுக்கு, குலோப்ஜாமூன் எனக் குழந்தைகள் கேட்பதை எல்லாம் வாங்கிக்கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

சிறுதானியத்தில் ஸ்நாக்ஸ் செய்து கொடுக்கலாம். ஆப்பிள், கொய்யா போன்ற ஏதாவது ஒரு பழத்தை முழுமையாகக் கொடுத்து அனுப்பலாம். காய்கறிகள் சாலட் செய்து தரலாம்.

தண்ணீர்

தண்ணீர் வழியாகப் பல நோய்கள் பரவும். எனவே, வெளி இடங்களில் சுகாதாரமற்ற தண்ணீரைக் குழந்தைகள் குடிப்பது தவறு எனச் சொல்லிக்கொடுக்க வேண்டும்.

தினமும் தண்ணீரைக் கொதிக்கவைத்து, வடிகட்டி, ஆறவைத்துக் கொடுத்து அனுப்ப வேண்டும்.

- பு.விவேக் ஆனந்த்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்