ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

ஹெல்த்

“திருமணம் ஆகி, ஓராண்டில் கருத்தரிக்கவில்லை எனில், மகப்பேறு மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். பெண்கள் 30 வயதுக்குள் தாய்மை அடைய வேண்டும். இந்தக் காலகட்டத்தில்தான் அவர்கள் உடல்நிலை கருத்தரிக்கவும், கரு ஆரோக்கியமாக வளரவும் ஏற்றதாக இருக்கும். ஆனால், தற்போது நிறைய பெண்கள் 35 வயதுக்கு மேல் ஆகியும் குழந்தைப்பேறு இல்லை என சிகிச்சைக்கு வருகின்றனர். `ஏன் இவ்வளவு தாமதமாக வருகிறீர்கள்?’ என்று கேட்டால், `என் அப்பா அம்மாவுக்கு நான் 10 வருடங்கள் கழித்துத்தான் பிறந்தேன். அதனால், நானும் சில காலம் காத்திருந்துவிட்டு வருகிறேன்’ என்கின்றனர். அப்போது இருந்த சூழலும், வாழ்க்கைமுறையும் இன்று இல்லை. அப்படியிருக்கும் போது வயது ஆகி, தாமதமாக சிகிச்சைக்கு வந்தால் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு சிகிச்சைகள் கைகொடுக்காமல் போகலாம். இன்றைய காலகட்டத்தில், பெண்கள் தாமதமாகத் திருமணம் செய்துகொள்வதுடன், குழந்தை பெற்றுக்கொள்வதற்குத் தயாராக இல்லாமல் தள்ளிப்போடுகின்றனர். இதனால், கருமுட்டை தரம் குறைந்து, கருத்தரிக்கக்கூடிய வாய்ப்புகளும் குறைந்துகொண்டே போகின்றன. எடையும் அதிகரிப்பதால், குழந்தை பெற்றுக்கொள்ள சிரமமாகிவிடுகிறது” என்கிறார் மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் கல்பனா.

“சில பெண்களுக்குத் தொடர்ந்துக் கருச்சிதைவு ஆகிக்கொண்டே இருக்கும். பரிசோதனைசெய்து பார்க்கும்போது, பெண் அல்லது ஆணின் மரபணுவில் பிரச்னைகள் இருக்கும். மரபணு பிரச்னை இருக்கும் சமயத்தில், பெண் கருவுற்றால், பிறக்கும் குழந்தையும் மரபணுப் பிரச்னையால் பாதிக்கப்படலாம். இவர்களது கருவை ஸ்கிரீன் டெஸ்ட் செய்து, எந்த மரபணு நார்மலாக உள்ளதோ அந்தக் கருவைப் பெண்ணுக்குச் செலுத்தினால், கருச்சிதைவு பிரச்னை நீங்கி, குழந்தை பெற்றுக்கொள்ள முடியும்” என்கிறார் டாக்டர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்