மருந்தில்லா மருத்துவம் - 3

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஹெல்த்ஸ்வாதிஷ்டானா சக்கரம்

டலில் உள்ள ஏழு சக்கரங்களில், இரண்டாவதாக இருப்பது ஸ்வாதிஷ்டானா. இது, முன் மற்றும் பின் பக்கம் என இரண்டு இடங்களில் உள்ளது. முன் ஸ்வாதிஷ்டானா, தொப்புளுக்கு கீழ்ப் பகுதியில் அடி வயிற்றில் மையமாகக்கொண்டுள்ளது. அதற்கு சரி நேராக, பின்புறத்தில் பின் ஸ்வாதிஷ்டானா அமைந்துள்ளது. ஆரஞ்சு நிறமுடைய இதழ்களைக் கொண்ட இந்தச் சக்கரம் பஞ்ச பூதங்களில் ஒன்றான நீரைச் சார்ந்தது. குழந்தைக்கு 6-ல் இருந்து 18 மாதங்கள் வரையிலான காலக்கட்டத்தில் இந்தச் சக்கரம் மலரும்.

இந்தப் பருவத்தில்தான், குழந்தை தவழ்ந்து, நின்று, நடை பழகும். தொடு உணர்ச்சிகளின் ஊக்கத்தில், சுற்றியுள்ள பொருட்களை கைகளால் பயமின்றித் தொட்டு பார்க்கும். நடை பழகும்போது விழுந்தால், தாயின் அரவணைப்பைத் தேடும். ஸ்பரிச உணர்வை வலி ஏற்பட்டாலும் மனது அறியும். ஆகையால், உடலும் மனமும் ஒருங்கிணைக்கும் பருவம் இது. தாயின் அரவணைப்போ, வெறுப்போ, குழந்தையின் மனதில் நிரந்தரமாகப் படியும் காலம் இது. தாயின் இந்த ஆதரவும் அரவணைப்பும்தான், அந்தக் குழந்தை வளர்ந்த பின் எதையும் எதிர்கொள்ளும் சக்தியை அளிக்கிறது. தாயின் அரவணைப்பின்றி வளரும் குழந்தை, பிற்காலத்தில், சமூகத்தைத் தவிர்த்து, தனித்து வாழும் குணத்துடன் இருக்கலாம். இதனால் ஸ்வாதிஷ்டானா சக்கரம் வளரும் பருவம், குழந்தையின் வாழ்வில் முக்கியமானது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்