ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

ஹெல்த்

“சென்னை மட்டும் அல்ல, தமிழகக் கடலோர மாவட்டங்கள் அனைத்துமே மழை வெள்ளத்தால், கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன. கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் இயல்புநிலைக்கு மீண்டுவருகிறார்கள். இயற்கைப் பேரிடர் ஏற்படும் சமயங்களில், அந்தப் பேரிடருக்குப் பின் 90 நாட்கள் முதல் 9 மாதங்கள் வரையிலும், பேரிடரைச் சந்தித்தவர்கள் மனரீதியாகப் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். குறிப்பாக, பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அவர்களுக்கு மனரீதியான உதவி அளிக்க வேண்டியது மிகவும் முக்கியம்” என்கிறார் மனநல நிபுணர் டி.வி.அசோகன்.

“மழை வெள்ளத்தால் வீடுகளில் உள்ள பொருட்கள் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற உடல்நலக் குறைபாடு இருப்பவர்கள், அன்றாடம் மாத்திரை சாப்பிட வேண்டியிருக்கும். பேரிடரில் வீடு, உடைமையை இழந்தவர்கள் மாத்திரையை வாங்கிச் சாப்பிடுவது எளிதில் சாத்தியம் அல்ல. மாத்திரை சாப்பிடாததன் காரணமாக, மோசமான விளைவுகள் ஏற்பட்டிருக்கும். மலம், சிறுநீர் கழிக்கக்கூட இடமின்றி சிலர் மிகவும் சிரமப்படுகின்றனர். பெண்கள் நாப்கின் வசதி இன்றித் தவிக்கின்றனர். பேரிடருக்குப் பின் ஏற்படும் மனரீதியான பாதிப்புகளை, `பி.டி.எஸ்.டி (Post Traumatic Stress Disorder)’ என்பார்கள். சொந்த வீட்டை, சிறுகச் சிறுகச் சேமித்து, ஆசையாக வாங்கிய வீட்டு உபகரணங்களை இழந்து, இ.எம்.ஐ போன்றவற்றையும் கட்ட வேண்டும் என்ற நிலையில் இருப்பவர்கள், இந்தப் பேரிடர் பாதிப்பில் இருந்து மீள்வது சாதாரண விஷயம் இல்லை. மனம்விட்டுப் பேசுவதும், பாதிக்கப்பட்டவர் சொல்வதை, நேரத்தையும் காதையும் கொடுத்துக் கேட்பதும் அவசியம். இந்தப் பேரிடர் மனதையும் உடலையும் பாதித்து, பல நோய்களை உருவாக்கும்” என எச்சரிக்கிறார் டாக்டர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்