உணவின்றி அமையாது உலகு - 8

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ந்தியாவுக்கு வந்திருக்கும் நவீன ஆபத்தின் பெயர்தான்  `சிந்தட்டிக் மில்க்.’ இதனை செயற்கைப் பால் என்று சொல்வதைவிட, நச்சுப்பால் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். இந்தியாவில் உள்ள ஓர் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தொடர்ந்தது. குழந்தைகளின் அடிப்படை உணவான பாலில் ரசாயனப்பொருட்கள் கலப்பது தொடர்பாக மத்திய அரசு கவனிக்க வேண்டும் என்றும், அது குறித்த விழிப்புஉணர்வை ‘உணவுப் பாதுகாப்பு அமைப்பு’ ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரியிருந்தது. 2012-ம் ஆண்டு, மே மாதம் உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உணவுப் பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்பியது. மத்திய அரசின் சார்பாக ஆஜரான வழக்குரைஞர் “உணவுப் பாதுகாப்பு மற்றும் கலப்படத் தடுப்பு என்பது, மாநில அரசுகளின் பிரச்னை. இதில், மத்திய அரசு செய்வதற்கு ஒன்றும் இல்லை” என்று நீதிமன்றத்தை மாநிலங்களின் பக்கம் திருப்பிவிட்டார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற கணக்கெடுப்பில்தான் எந்த அளவுக்கு சிந்தட்டிக் பால் பயன்படுத்தப்படுகிறது என்ற விவரம் வெளியானது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்