அந்தப்புரம் - 36

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஓவியம்: ஸ்யாம்

திருமணம் என்ற சமூக நிறுவனத்தின் புனிதத்தன்மையே, இரு மனங்களை, இரு குடும்பங்களை ஒன்றுசேர்ப்பதும், அதன் மூலம் புதிய புதிய உறவுகளைப் பெருக்குவதும், இணையும் இருவரின் வாழ்க்கைக்கும் புது அர்த்தத்தைக் கொடுப்பதும்தான். அனன்யாவுக்கு அர்ஜுனைப் பார்த்ததுமே காதல். அவளது கண்கள், அர்ஜுனின் கூர்மையான கண்களையே பார்த்துக்கொண்டிருந்தன. அர்ஜுனைத் தவிர்த்து, அந்த அரங்கில் இருந்த அனைவரும் கொஞ்சம் நேரத்துக்கு அவளது பார்வையில் இருந்தே மறைந்துபோய்விட்டனர்.

அர்ஜுன் மிகவும் அழகான, ஃபிட்டான, அனைவரையும் கவர்ந்திழுக்கக்கூடிய ஆண்மகன். 26 வயதான அவன் வெளிநாட்டு வங்கி ஒன்றில் பணியாற்றிவந்தான். ஓய்வின்றிக் கடுமையாக உழைப்பவன், படிப்பில் ஆர்வம் கொண்டவன். அவன் அழகே, அவன் அணியும் கண்ணாடிதான். எப்போதும், புத்தகமும் கையுமாக இருப்பவன். எதையும் உன்னிப்பாகக் கவனிப்பவன், எந்த ஒரு விஷயத்துக்கும் தன்னை முழுமையாகத் தயார்ப்படுத்திக்கொண்டு வருபவன். எங்கே சென்றாலும் தன் அதீதப் புத்திசாலித்தனம் மற்றும் அறிவுஜீவித்தனத்தை வெளிப்படுத்தத் தயங்க மாட்டான். எந்த வகையிலும் தான் பின்தங்கிவிடக் கூடாது என்பதில் விழிப்பாக இருப்பவன். தினசரி காலையில் ஜாகிங் செல்வான். வாரத்துக்கு இரண்டு நாட்கள் தீவிர டென்னிஸ் பயிற்சி செய்வான். அவனது மிகத் தீவிரப் பொழுதுபோக்கே சி.என்.பி.சி உள்ளிட்ட நிதி மற்றும் செய்தி தொடர்பான தொலைக்காட்சிகளைப் பார்ப்பதுதான். அவனது முடிவற்ற அறிவுத்தாகம் அவனை இதுபோன்று டி.வி., இணையம் மற்றும் தொழில் தொடர்பான இதழ்களில் மூழ்கத் தூண்டியது. அவனது இந்த சின்சியாரிட்டி மற்றும் ரிசர்வ்டு சுபாவம் அனன்யாவுக்கு ஆச்சர்யத்தை அளித்து, அவன் பக்கம் ஈர்த்தது.

அனன்யா... கலகலப்பானவள். ‘வாழ்க்கை வாழ்வதற்கே’ என்று எப்போதும் மகிழ்ச்சியுடன் துள்ளித் திரிபவள். அவள் வேலைபார்க்கும் ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் செல்லக் குட்டி. 5 அடி, 7 அங்குல உயரம். தோள்பட்டை வரை வெட்டிவிட்ட முடி, கச்சிதமான உடல்வாகு என அனைவரையும் கவரும் தோற்றம்கொண்டவள். எல்லாவற்றையும் விருப்பத்துடன் செய்யும் தன்மை கொண்டவள். தன் கலகலப்பால், சிரிப்பால் அவள் இருக்கும் இடத்தையே உற்சாக வெள்ளத்தால் நிரப்புவாள். 

சூழலுக்கு ஏற்பத் தன்னை மாற்றிக்கொள்வதுடன், மற்றவர்களையும் அந்தச் சூழலுக்கு ஏற்றவர்களாக மாற்றுவதுதான் அனன்யாவின் ஸ்பெஷாலிட்டி. அவளது இந்தத் தன்மைதான் அர்ஜுனை அவளிடம் அழைத்துவந்தது. ‘எதிரெதிர் துருவங்கள் ஈர்க்கும்’ என்ற பழைய தத்துவத்துக்கு  இவர்கள் காதல் ஒரு சிறந்த உதாரணம். அர்ஜுனின் வங்கி பார்ட்டியில் இருவரும் சந்தித்துக்கொண்டனர். அந்த பார்ட்டிக்கான ஏற்பாடுகளைச் செய்தது அனன்யாவின் நிறுவனம்தான். இருவருக்குமே பார்த்ததும் பற்றிக்கொண்டது காதல். பிறகு, ஒரு சுபயோக சுபதினத்தில் காதலர்கள் மணமக்கள் ஆனார்கள். இல்லறம் என்னும் நல்லறம் தொடங்கியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்