இனி எல்லாம் சுகமே - 12

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
செரிமானம் அறிவோம்!

“எனக்கு கேஸ்ட்ரைடிஸ் பிரச்னை இருக்கு. இதுக்கு நான் என்ன பண்ணணும்” இந்த வார்த்தைகளை நான் ஒவ்வொரு வாரமும் குறைந்தபட்சம் 10 பேரிடம் இருந்தாவது கேட்கிறேன். கேஸ்ட்ரைடிஸ் என்பதை மருத்துவரீதியாக விளக்கவேண்டும் எனில், இரைப்பை உட்தோலின் அழற்சி (Inflammation of inner mucosal lining of stomach) எனச் சொல்லலாம். 

இரைப்பைச் சுவரில் அழற்சி ஏற்பட்டால், அதன் பாதிப்பு வெவ்வேறு வகையான வெளிப்பாடாக நமக்குக் காட்டும். ஒரு சிலருக்கு பசி இருக்காது, சிலருக்கு மிக விரைவாக வயிறு நிறைந்த உணர்வு ஏற்படும். குமட்டல், வாந்தி, ஏப்பம், மேல்வயிற்று உப்புசம் போன்ற பிரச்னைகளும் சிலருக்கு வரலாம். இதுபோன்ற இரைப்பை பிரச்னைகளைச் சந்திக்கும்போது, பலருக்கும் எந்தப் பிரச்னையின் வெளிப்பாடாக இந்தக் கோளாறு வருகிறது எனத் தெரியாது. ஆனால், தனக்கு இந்தப் பிரச்னையாகத்தான் இருக்கும் என முடிவு செய்துகொண்டு, மருந்தகங்களுக்குச் சென்று சுயமாக மருந்து மாத்திரைகளை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு சரியாகவில்லை எனப்  புலம்புவார்கள். மேலே நான் சொன்ன இரைப்பை அழற்சியின் அறிகுறிகள் சில நாட்கள் அல்லது ஓரிரு வாரங்கள் மட்டும் நீடித்தால் அதனை, தற்காலிக கேஸ்ட்ரைடிஸ் (Acute Gastritis) என்றும் நீண்ட நாட்கள் நீடித்தால் நாட்பட்ட கேஸ்ட்ரைடிஸ் என்றும் சொல்லலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்