மருந்தில்லா மருத்துவம் - 12

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சஹஸ்ராரா சக்கரம்

ழு சக்கரங்களில் தலையாயது, மனிதனுக்குக் கிரீடமாக இருப்பது சஹஸ்ராரா சக்கரம். இதை, ஆயிரம் இதழ்களுடைய தாமரையாக உருவகப்படுத்துகின்றனர். முதலாவது சக்கரமான மூலாதாரச் சக்கரத்தின் சக்தியால் உந்தப்பட்டு, மற்ற சக்கரங்கள் அந்தந்தப் பருவத்தில் தடங்கல் இன்றி மலரும்போது, ஏழாவது சக்கரமான சஹஸ்ராரா சக்கரம் அழகாக மலரும். ஊதா நிறம் உடைய இதழ்களைக் கொண்டது. மூளையின்  நடுவே இருக்கும் பினியல் எனும் நாளமில்லா சுரப்பியைச் சார்ந்தது. அனாஹதச் சக்கரம், பக்தி, அன்பின் இருப்பிடம். இந்தச் சக்கரத்தின் உணர்ச்சியால் சஹஸ்ராரா சக்கரம் மேலும் வலுவடையும்.

அனாஹதச் சக்கரத்தின் உணர்ச்சியும், சஹஸ்ராரா சக்கரத்தின் உணர்ச்சியும், ஒருங்கிணையாவிட்டால், இந்தச் சக்கரம் மலர்ந்தாலும், ‘நான்’ எனும் அகம்பாவம், இயற்கை/இறைவனை ஏற்க மறுப்பது போன்ற குணங்கள் தோன்றும். சக்கர தியானம் செய்வதால், எல்லா சக்கரங்களையும் சம நிலையில் இயங்கச்செய்து, நம்மையும் இறைவனையும் இணைக்கும் நிலையை அடையலாம். இதை ‘சமாதி நிலை’ என்பர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்