உடலினை உறுதிசெய் - 17

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
பர்ஷ்வகோனாசனா

கால்களை அகட்டி, கைகளைப் பின்னால் கோத்தபடி, நேராக நிற்க வேண்டும். இது பக்கவாட்டில் செய்யக்கூடிய ஆசனம் என்பதால், வலது கால் முட்டியை மடக்கி, வலது புறம் தள்ளிவைக்க வேண்டும். இடது காலை முடிந்த அளவு இடது புறம் தள்ளிவைத்துத் தரையில் பதித்து உடலைச் சமநிலையில் இருக்கச்செய்ய வேண்டும். இப்போது, மூச்சை இழுத்தபடி இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி, மூச்சை விட்டபடி பக்கவாட்டில் உடலை வலது புறம் வளைத்து, வலது கையால் வலது காலைத் தொட வேண்டும். இடது கை மூட்டு காதோடு ஒட்டியபடி கைகள் சாய்வாக இருக்கட்டும். சில விநாடிகள் அப்படியே இருந்துவிட்டு, மூச்சை இழுத்தபடி கைகளை நேராக்கி, பழைய நிலைக்கு வந்து, மூச்சை விட்டபடியே நேராக நிற்கும் நிலைக்கு வர வேண்டும். இதேபோல, இடது பக்கமும் செய்ய வேண்டும். இப்படி மூன்று முறை செய்யலாம்.

கவனிக்க:
கால் வலி, நரம்புப் பிரச்னை, கை நடுக்கம் உள்ளவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாரடைப்பு, பக்கவாதம் வந்தவர்கள் இதைச் செய்ய வேண்டாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்