நலம் தரும் நாயுருவி

சாலை ஓரங்களில், காலி இடங்களில் புதர் போல மண்டி வளர்ந்திருக்கும் நாயுருவியை நாம் தினமும் கடந்து் செல்கிறோம். ஆனால், அது மிகச்சிறந்த மூலிகை என்பது தெரியாது. நாயுருவிக்கு `சிறு கடலாடி’, `மாமுனி’, `நாய்க்குருவி’, `நாயரஞ்சி’ எனப் பல பெயர்கள் உள்ளன.

நாயுருவியின் இன்னொரு வகை செந்நாயுருவி. ‘இது, உடலைத் தேற்றுவதற்கும், சிறுநீரைப் பெருக்குவதற்கும், முறைச்சுரம் அகற்றுவதற்கும் உதவும்’ என்கிறது, சித்த மருத்துவம்.

இதன் இலைக்கு, கழிச்சல், ரத்தக்கழிச்சல், வெள்ளைப்படுதல் அதிக வியர்வை ஆகியவற்றைப் போக்கும் குணம் உண்டு. இதன் முழுச் செடியை அந்தக் காலத்தில் பெண்களுக்குப் பேறுகாலத்துக்குப் பின் ஏற்படும் அழுக்குத்தடைகளை போக்குவதற்குப் பயன்படுத்தினார்கள்.

உடலில் ஏற்படும் வீக்கம், ரத்தக்குறைவு, காமாலை போன்றவற்றைப் போக்குவதோடு, மாதவிடாயை ஒழுங்குபடுத்தும் தன்மையும் நாயுருவிக்கு உண்டு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்