இன்ஷூரன்ஸ் இப்போ ஈஸி - 12

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
பாலிசி அலசல்

ந்தியாவில்  சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. சிகிச்சைக்கு வருபவர்களுக்கு இணையாக, தங்களுக்கு சர்க்கரை நோய் இருப்பதுகூட தெரியாமல் வாழ்பவர்கள் எண்ணிக்கையும் அதிகம். சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்காமல்போகும்போது கண், சிறுநீரகம், நரம்பு, கால், இதயம் என்று உடலில் உள்ள உறுப்புக்கள் பாதிக்கப்படும். சர்க்கரை நோயால் ஏற்படக்கூடிய விளைவுகளும் செலவும் அதிகம் என்பதால், இதை ‘ஹை ரிஸ்க்’ நோய் என்று காப்பீட்டு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பிரத்தியேக பாலிசிகள் கிடையாது. சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல பாலிசி கிடைப்பது கடினமானதாக இருந்தது. ஆனால், அதிகரித்துவரும் போட்டியின் காரணமாக, தற்போது சில நிறுவனங்கள் சர்க்கரை நோய்க்கு எனப் பிரத்யேக பாலிசிகளை வெளியிட்டுள்ளன. முதலில், ‘ஸ்டார் ஹெல்த்’ நிறுவனம் ‘டயாபடீஸ் சேஃப்’ என்ற பெயரில் சர்க்கரை நோயாளிகளுக்கான முழுமையான பாலிசியை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து இப்போது நான்கைந்து நிறுவனங்கள் சர்க்கரை நோயாளிகளுக்கான பாலிசியை அளிக்கின்றன.

சர்க்கரை நோயாளிகள் பொது மருத்துவக் காப்பீடு எடுக்கும்போது நிராகரிக்கப்பட வாய்ப்பு அதிகம். சர்க்கரை நோய் உள்ளதை மறைத்து மருத்துவக் காப்பீடு எடுத்தால், பிற்காலத்தில் க்ளெய்ம் கிடைக்காமல் போய்விடும். அப்படியே, காப்பீடு கிடைத்தாலும் உடனடி கவரேஜ் கிடைக்காது. சில ஆண்டுகள் காத்திருப்புக் காலம் இருக்கும். இந்தப் பிரச்னைகளைத் தவிர்க்க சர்க்கரை நோய்க்கான பிரத்தியேக பாலிசியை எடுத்துக்கொள்வது நல்லது. இந்த பாலிசியிலேயே அவர்களுக்கு மற்ற நோய்களுக்கான கவரேஜும் கிடைத்துவிடும். ஒவ்வொரு நிறுவனமும் சில வரையறைகளை வைத்திருக்கின்றன. எனவே, பாலிசி வாங்கும்போது முழுமையாகப் படித்து, விளக்கம் பெற்று அதன் பிறகு எடுப்பது நல்லது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்