ஸ்வீட் எஸ்கேப் - 13

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சர்க்கரையை வெல்லலாம்

ம்டைய கால் மற்றும் பாதங்கள் தினசரி மிகக் கடுமையான பணிகளைச் செய்கின்றன. நம்முடைய, இயக்கம் உள்ளிட்ட பெரும்பான்மையான செயல்பாடுகள் நிகழத் துணை புரிவது பாதங்கள். சர்க்கரை நோய் என்று வரும்போது, பலரும் செய்யும் தவறு பாதங்களைப் பராமரிக்கத் தவறுவதுதான். இதனால், கால்களை அகற்ற வேண்டிய அளவுக்குக்கூட பிரச்னை தீவிரம் அடைகிறது. ஒவ்வொரு 30 விநாடியிலும், உலகில் ஏதாவது ஒரு மூலையில் ஒருவருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு காரணமாக கால் துண்டிப்பு அறுவைசிகிச்சை நடக்கிறது.

இந்தியாவில் மட்டும் ஏறத்தாழ 7 கோடி சர்க்கரை நோயாளிகள் இருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சர்க்கரை நோய் காரணமாக ஒரு லட்சத்துக்கும் அதிகமானோருக்கு, கால் அகற்றும் அறுவைசிகிச்சை செய்யப்படுகிறது. இந்த மிக மோசமான புள்ளிவிவரங்கள் எல்லாம் இன்னும் எந்த அளவுக்கு சர்க்கரை நோயாளிகள் மத்தியில் விழிப்புஉணர்வை ஏற்படுத்த வேண்டும் எனத் தெளிவாக்கும்.

பாதங்களில் புண் ஏன் ஏற்படுகிறது?

பாதங்களில் புண்கள் ஏற்படுவதற்கு, டயாபடீக் நியூரோபதி, போதுமான அளவு பாதத்துக்கு ரத்த ஓட்டம் இன்மை, நோய்த்தொற்று ஆகியவை முக்கிய காரணங்கள்.

டயாபடீக் நியூரோபதி காரணமாக புண்

டயாபடீக் ஃபுட் பிரச்னை ஏற்பட மிக முக்கியக் காரணம், டயாபடீக் நியூரோபதி. ரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை, பாதம் மற்றும் காலில் உள்ள நரம்புகளைப் பாதிப்படையச்செய்கிறது. இதனால், பாதத்தில் எரிச்சல், கூச்சம் மற்றும் உணர்வற்ற தன்மை ஏற்படுகிறது. இந்த சூழலில், பொருத்தமற்ற காலணி அணிவது, வெறும் காலில் நடப்பது போன்ற தவறான செயல்கள் காரணமாக புண் ஏற்படுகின்றன. அதிலும், குறிப்பாக, காலில் உணர்வு இல்லாத நிலையில், வெறும் காலில் நடக்கும்போது காயம் ஏற்பட்டாலும் தெரிவது இல்லை. இந்த புண்கள் எளிதில் ஆறுவதும் இல்லை. கவனிக்காமல் விடும்போது, கடைசியில் பாதத்தையே அகற்ற வேண்டிய நிலை ஏற்படுகிறது. டயாபடீக் நியூரோபதி காரணமான புண்கள் பெரும்பாலும் பாதத்தில்தான் ஏற்படுகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்