மருந்தில்லா மருத்துவம் - 13

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
முதுகு வலி

டலுக்கு ஒரு உருவம் கொடுத்து நேராக நிற்க, வலிமை உள்ள முதுகெலும்பு அவசியம். முதுகுவலி என்று சொல்லும்போது அது, நடு முதுகையும் கீழ் முதுகையும் குறிக்கும். ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கிவைக்கப்பெற்றுள்ள முதுகெலும்புகள்  உறுதியாக இருக்க, இயற்கையின் அமைப்பை அறிய வேண்டும். நடு முதுகில், ஐந்து லம்பார் (5 lumbar) எலும்புகள் உள்ளன. முதுகெலும்புத் தொடருக்குள்  தண்டுவட நரம்புகள் செல்கின்றன. இந்த அமைப்பைப் பாதுகாக்க, தேவையான ஊட்டச்சத்துக்களை அளிக்க, நரம்புகள், ரத்தக் குழாய்கள், வலிமையான தசைகள் உள்ளன.

லம்பார் எலும்புகள், முதுகுப் பக்கம் மார்புக்கூட்டுக்கும் கீழே இடுப்பு எலும்புகளுக்கு இடையே உள்ளது. கீழ்முதுகில், வயிற்றின் அடிப்பாகத்தில் உள்ள  உறுப்புகளைப் பாதுகாக்க, சேக்ரம் (Sacrum) எனும் பகுதி உள்ளது. இந்தப் பகுதி, எலும்புகள் இணைந்து, ஒரு சிறு பலகை போல் தோன்றும். இதனுடன், இடுப்பு எலும்பு கூடி, அடி வயிற்றில் உள்ள உறுப்புகளைப் பாதுகாக்க ஒரு கவசம் போல் செயல்படுகிறது.

ஏன் இந்த அதிசயமான அமைப்பு?


உடலின் கீழ் புறத்தில் பெண்களுக்கு  வலிமையான தசைகளால் ஆன கர்ப்ப்ப்பை உள்ளது. பெண் இனப்பெருக்க மண்டல உறுப்புகளும் இங்கு உள்ளன. இவற்றைப் பாதுகாக்க, இடுப்பு எலும்புகள் உள்ளன. ஆனால், ஒரு பெண் கருத்தரிக்கும்போது ஒரு நுண்ணிய செல்லில் இருந்து கரு வளர்ச்சி அடைந்து, சிசுவாகக் கர்ப்பப்பைக்குள் வளர்கிறது. வளரும்போது, தசைகளால் ஆன கர்ப்பப்பையும் விரிவடைந்து, மேல் வயிற்றுப்பகுதிக்குச் செல்கிறது. இந்தப் பகுதியில், எலும்புகள் இருந்தால், கர்ப்பப்பையில் வளரும், சிசுவின் வளர்ச்சி பாதிக்கப்படும். இதனால், அந்தப் பகுதியில் அடர்த்தியான வலுவுள்ள தசைகள் மட்டுமே உள்ளன. இந்தத் தசைகளுக்கு லம்பார் பகுதியிலிருந்து வரும் நரம்புகள் வலுட்டுவூகின்றன. இந்த அமைப்பு, சிசுவின் பாதுகாப்பான வளர்ச்சிக்கு ஏதுவாகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்