நோயாளிக்கு என்ன பரிசு கொடுக்கலாம்!

அசத்தல் ஐடியாஸ்

டல்நலம் இல்லாமல் நோயால் பாதிக்கப்பட்டு அல்லது விபத்துகளில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அல்லது சிகிச்சை முடிந்து வீட்டில் ஓய்வு எடுக்கும்  உறவினரையோ, நண்பரையோ பார்க்கச் செல்கையில் ,என்ன வாங்கிச் செல்லலாம்?

ஏதாவது வாங்கிச் செல்ல விரும்பினால், முதலில் அவருக்கு உணவுக் கட்டுப்பாடு ஏதேனும் விதிக்கப்பட்டிருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்வது நல்லது. நோயின் தன்மையைப் பொருத்து சிலருக்கு உப்புக் கட்டுப்பாடு, திட உணவுக் கட்டுப்பாடு, நீராகாரக் கட்டுப்பாடு என மருத்துவர் பரிந்துரைத்திருக்கலாம்.

இதுதெரியாமல், அந்தப் பொருட்களை வாங்கிச் செல்வதால், நோயாளிக்கு எந்த பயனும் இல்லை.

பொதுவாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளியைச் சென்று சந்திக்கும்போது, உணவுப் பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டாம். கார்ப்பரேட் மருத்துவமனைகளில் இதை அனுமதிப்பதும் இல்லை.

ஐ.சி.யூ-வில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளைப் பார்க்கச் சென்றால், நிச்சயம் உணவுப் பொருட்கள் வேண்டாம். ஐ.சி.யூ-வில் இருப்பவர்களைப் பார்க்க, குழந்தைகளையும் அழைத்துச் செல்ல வேண்டாம்.

பெரும்பாலான மருத்துவமனைகளில் நோயாளிகளின் டயட் தொடர்ந்து  கண்காணிக்கப்படும். ஆதாலால், நீங்கள் வாங்கிச் செல்லும் உணவுப் பொருட்களை வற்புறுத்தி ஊட்டிவிடுவது தவறு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்