நலம் தரும் நார்ச்சத்து

நார்ச்சத்து... நாம் உட்கொள்ளும் இயற்கை உணவில் நிறைந்து இருக்கும், ஆனால் உடலுக்கு எவ்வித ஊட்டச்சத்துக்களையும் அளிக்காத ஒரு பொருள். இதுமட்டும் இல்லை என்றால், நம்முடைய செரிமான மண்டலத்தின் செயல்பாடே கேள்விக்குறியாகிவிடும். அந்த அளவுக்கு அத்தியாவசியமான பொருள். நாம் உட்கொள்ளும் உணவு செரிக்கப்பட்டு சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல் வழியே பயணித்து வெளியேற வேண்டும். இப்படி ஒவ்வொரு பகுதியாகப் பயணிக்கும்போதுதான் அதில் உள்ள ஊட்டச்சத்துக்களை உடல் கிரகித்துக்கொள்ளும். நார்ச்சத்து இல்லாத உணவை உட்கொள்ளும்போது அது உணவின் செரிமான மண்டலப் பயணத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

விலங்குகளில், அசைவம், அசைவ உணவு சாப்பிடுபவை எனப் பிரித்து அதன் வாழ்க்கை முறையைக் கவனித்தோம் என்றால், நார்ச்சத்தைப் பற்றி புரிந்துகொள்ளலாம். யானை, மான், மாடு போன்ற சைவ விலங்குகள்,  உடல் கழிவை பெரிய அளவில் அதேநேரத்தில் எந்தவிதச் சிரமமும் இன்றி வெளியேற்றும். இதுவே அசைவம் உண்ணும் சிங்கம், புலி தொடங்கி நம் வீட்டில் வளர்க்கும் நாய், பூனை போன்ற விலங்குகளின் கழிவுகள் கெட்டியாக, வெளியேற்றவே சிரமப்படுவதைக் காணலாம். இதே உதாரணம், மனிதர்களுக்கு கிட்டத்தட்டப் பொருந்தும். இதற்கு, சைவ உணவுகளில் நார்ச்சத்து நிறைந்திருப்பதும், அசைவ உணவுகளில் நார்ச்சத்து குறைவாக இருப்பதுமே முக்கியக் காரணம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்