பல் ஹைஜீன்

பற்கள், வாய் ஹைஜீன்

அழகான, ஆரோக்கியமான, ஈர்க்கும் புன்னகை வாழ்நாள் முழுக்க நீடிக்க, வாயையும் பற்களையும் சுத்தமாகப் பராமரிப்பது மிகமிக அவசியம். எப்படிப் பராமரிப்பது என்று பல் மருத்துவர்களைக் கேட்டாலே, சொல்லித்தருவார்கள். ஆனால், இது எல்லாம் தெரிந்ததுதானே என்று நாம் கவனக்குறைவாக இருப்பதுதான், வாய் ஹைஜீன் கெட முக்கியக் காரணம்.

எப்படிப் பல் விளக்குவது?

தினமும் இரண்டு வேளை பல் துலக்க வேண்டும் என்று சொன்னாலும் யாரும் அதைப் பின்பற்றுவது இல்லை. ஒருவேளை பல் தேய்த்தாலும், சரியாகச் செய்கிறார்களா என்றால்? அதுவும் இல்லை. பிரஷ்ஷில் பேஸ்டை வைத்துச் சில நிமிடங்கள் வேகமாகத் தேய்க்கிறார்கள். சிலரோ, நீண்ட நேரம் தேய்தேய் எனத் தேய்க்கிறார்கள். இவை சரியான முறை கிடையாது. மேலும், பிரஷ்ஷை  கிடைமட்டமாகவோ மேலும் கீழுமாகவோ தேய்க்கவும் கூடாது. பற்களின் மேல் வட்ட வடிவில் சுற்றித் தேய்க்க வேண்டும். ஒவ்வொரு  பல்லையும் தேய்ப்பதற்கு  ஓரிரு விநாடிகள் எடுத்துக்கொள்ள வேண்டும். மிகவும் வேகமாக, நீண்ட நேரம் பல் தேய்த்துக்கொண்டே இருந்தால், எனாமல் தேய்ந்துவிடும். மிகக் குறைவான நேரம் மட்டுமே பல் தேய்ப்பதால் அழுக்குகள், கிருமிகள் அகலாது. பொதுவாக, ஒரு முறை முழுமையாகப் பல் தேய்க்க இரண்டு மூன்று நிமிடங்கள் எடுத்துக்கொள்வது நல்லது. காலை, இரவு இரு வேளையும் பல் தேய்ப்பது, பற்களைச் சுத்தமாக வைத்திருக்க உதவும்.

டூத் பிக் வேண்டாம்!

தற்போது, டூத் பிக் உபயோகம் அதிகரித்து உள்ளது. பற்களுக்கு இடையே ஏதேனும் சிக்கிவிட்டால், டூத் பிக் பயன்படுத்துகின்றனர். டூத் பிக்கால் ஈறுகளுக்கும் பற்களுக்கும் இடையே சந்து உருவாகும். அடிக்கடி குத்துவதால் பற்கள் தேய்ந்து, ஓட்டை விழ ஆரம்பிக்கும். டூத் பிக்களுக்கு பதில் கடைகளில் கிடைக்கும் டெண்ட்டல் ஃபிளாஸ் (Dental Floss) பயன்படுத்தலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்