ஹெல்த்தி டீஸ்பூன் 8

ருவர் அன்றாட வாழ்வில், எளியமுறையில் ஆரோக்கியம் காத்திட, கடினமான காரியத்தைச் செய்ய வேண்டியது இல்லை. எளிய, டீஸ்பூன் டெக்னிக்கைப் பயன்படுத்தலாம். ஆரோக்கியத்துக்கான சின்ன ஆரம்பமாக இந்த டீஸ்பூன் டெக்னிக் இருக்கும். அது என்ன டீஸ்பூன் டெக்னிக்?

கற்றாழையை வளர்க்க இயலாதவர்கள், கற்றாழை ஜூஸை வாங்கி ஒரு ஸ்பூன் அளவுக்கு தினமும் குடித்துவரலாம். சருமம், கர்ப்பப்பை ஆகியவற்றுக்கு நல்லது.

கெட்டுப்போகாத உணவுப்பொருள் தேன். இதைப் பெரும்பாலும் மருத்துவத்துக்காகப் பயன்படுத்துகிறது ஆயுர்வேதம். ஜூஸ், சாலட், பிளாக் டீ போன்ற ஏதேனும் ஒன்றில் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து அருந்தலாம்.

இளஞ்சூடான நீரைக் குடிப்பதுதான் சரியான முறை. அதில் ஒரு டீஸ்பூன் சீரகம் கலந்து குடித்திட, செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலைப் போக்கி, தேகத்தை பொலிவாக்கி, அகம் (உடல்) முழுவதையும் சீராக்குகிறது.

கசப்பு சுவை கொண்டுள்ள வெந்தயம், மிக சிறந்த மூலிகை. சர்க்கரை நோய், உடல் வெப்பம், கணையப் பாதிப்பு, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு ஆகிய பிரச்னைகள் வராமல் தடுக்க, வெந்தயம் உதவும். மலச்சிக்கலைத் தீர்க்கும்.

“நீரைச் சுருக்கி, நெய்யை உருக்கி, மோரைப் பெருக்கி” சாப்பிடுவதுதான் சரியான முறை என்கிறது சித்தர் பாடல். நெய்யை உருக்கித்தான் சாப்பிட வேண்டும். தினமும் மதிய உணவில் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றிச் சாப்பிடுவது நல்லது. சருமத்தை ஆரோக்கியமாக்கும். கல்லீரலுக்கு நல்லது.

நம் நாட்டில் விளையும் ஃபிளாக்ஸ் விதைகளின் அருமை தெரியாமல் இருந்தது. ஒரு டம்ளர் மோரில், ஒரு டீஸ்பூன் ஃபிளாக்ஸ் விதைப் பொடி கலந்து குடித்து வந்தால், உடல் எடை குறையும். இதய ஆரோக்கியம் மேம்படும்.

கொசுவர்த்தி, லிக்விட், மேட் போன்ற கொசு விரட்டிகளின் ரசாயனங்களால், நமக்கு கொசு கடிப்பதைவிட அதிக பாதிப்புகள் வரலாம். மாலை நேரத்தில் ஒரு டீஸ்பூன் புதினா எண்ணெயை தண்ணீரில் கலந்து படுக்கும் அறையில் ஸ்ப்ரே செய்திட, கொசுக்கள் வருவதைத் தடுக்கலாம்.

சருமத்திற்கு மாய்ச்சுரைசரைத் தரக்கூடிய இயற்கை லோஷன்தான் தேங்காய் எண்ணெய். தினமும் ஒரு டீஸ்பூன் எண்ணெயை எடுத்து கை, கால்களில் தடவி வந்தால், சருமம் வறட்சியாகாமல் பாதுகாக்கப்படும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்