அந்தப்புரம் - 34

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஓவியம்: ஸ்யாம்

குழந்தைப் பருவத்தில் இருந்து ஒன்றாக வளர்ந்தவர்கள், ஒருவரை ஒருவர் குறை சொல்லி சண்டை போடுவதால் பிரச்னை தீர்ந்துவிடாது என்பதை உணர்ந்தனர். ஒருவர் மீது ஒருவருக்கு அன்பும் பரிவும் அதிகரித்தன. இருப்பினும், என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருந்தனர். அப்போது, ப்ரீத்தமின் தோழனான அஸ்வின்தான், “நீங்க ரெண்டுபேரும் ஏன் ஒரு செக்ஸாலஜிஸ்ட்டை ப் பார்க்கக் கூடாது?” என்று ஆலோசனை சொன்னான்.

“முதல்ல நான் மட்டும் போனா போதாதா? ப்ரியாவும் வரணுமா?” என்று அப்போதும் தன் மனைவியை விட்டுக்கொடுக்காமல் கேட்டான் ப்ரீத்தம். “என்ன பிரச்னைன்னே தெரியலை. அதனால, ரெண்டு பேரும் போய் பார்க்கிறதுதான் நல்லது” என்று மருத்துவரிடம் அனுப்பிவைத்தான் அஸ்வின்.

இருவருக்கும் பொதுவான உடல் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இருவருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை என்று ரிப்போர்ட் வந்தது. இவர்களுக்கு இருப்பது மனம் சார்ந்த பிரச்னை என உணர்ந்த மருத்துவர், இருவரிடமும் தனித்தனியே பேசினார். முதலில், ப்ரீத்தமிடம் பேசும்போது, எந்தப் பிரச்னையும் இருப்பதாகத் தெரியவில்லை. அவரை வெளியே காத்திருக்கச் சொல்லிவிட்டு, ப்ரியாவிடம் பேசினார்.

செக்ஸ் பற்றிய ப்ரியாவின் அபிப்பிராயத்தைக் கேட்டபோது, “செக்ஸ்னா கொஞ்சம் பயம் டாக்டர். இருந்தாலும், ப்ரீத்தம் எப்பக் கேட்டாலும் முடியாதுன்னு சொன்னது இல்லை. கண்ணை இறுக்கமா மூடிக்குவேன்” எனத் தன் ஆழ்மனதில் இருந்த பயத்தைக் கொட்ட ஆரம்பித்தாள். ஏன் என்று விசாரித்தபோது, “நான் காலேஜ்ல படிக்கும்போது, என் தோழி ஒருத்திக்குக் கல்யாணம் ஆச்சு. அவ முதல் இரவுல நடந்த விஷயங்களை எங்கிட்ட ஷேர் செய்தாள். ரொம்ப வலிச்சுதாம், வேண்டாம் வேண்டாம்னு சொல்லியும் கேட்காம அவ புருஷன் இன்டர்கோர்ஸ் செய்தாராம். அதில், அவளுக்கு ப்ளீடிங் ஆச்சாம். ரொம்ப அழுதாளாம். இதை எல்லாம் கேட்டதில் இருந்து எனக்கும் செக்ஸ்னா ரொம்ப பயம். அதனால கல்யாணப் பேச்சு எடுத்தாலே டென்ஷன் ஆகிடுவேன். திடீர்னு, ப்ரீத்தம் கல்யாணம் செய்துக்கலாமானு கேட்டதும் பிடிச்சுப்போயிடுச்சு. அதனால, ஓ.கே சொன்னேன். ஆனாலும், செக்ஸ் பற்றிய பயம் மட்டும் இருந்துக்கிட்டே இருந்துச்சு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்