மருந்தில்லா மருத்துவம் - 10

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஆக்ஞா சக்கரம்

“நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே” நக்கீரர் சொன்ன இந்தச் சொற்கள், இன்று திருவிளையாடல் படம் காரணமாக மிகவும் பிரபலம். பலரும் அது என்ன நெற்றிக்கண் என்று கேட்பது உண்டு. அது கடவுளுக்கு மட்டும் உள்ளது என்று நினைத்துக்கொள்கின்றனர். ஆனால், மனிதர்கள் அனைவருக்கும் நெற்றிக்கண் உள்ளது... ஆனால், மறைவாக உள்ளது. ஏழு சக்கரங்களில் ஆறாவதாக மலரும் ஆக்ஞா சக்கரம்தான் அந்த நெற்றிக்கண். இது இரு கண்களுக்கு இடைப்பட்ட நெற்றிப்பொட்டில் அமைந்திருக்கிறது.

குழந்தைப் பருவம் முடிந்து, விவரம் புரியும் 13 - 17 வயதில் இந்தச் சக்கரம் மலரும். கருநீல வண்ண இதழ்கள் உடைய இந்தச் சக்கரம் மூளையின் ஒரு பாகமான பிட்யூட்டரி சுரப்பியைச் சார்ந்தது. ஆண், பெண் இரு பாலருக்கும் இந்தப் பருவத்தில் சில மன மாறுதல்கள் ஏற்படும். உடலில் சில மாற்றங்கள் ஏற்படும். மற்ற எல்லா சக்கரங்களையும் இயக்கும் சக்தி உடையதால், இந்தச் சக்கரத்துக்கு ஆக்ஞா என்று பெயர். இதைச் சார்ந்த பிட்யூட்டரி சுரப்பி, உடலில் உள்ள எல்லா ஹார்மோன் சுரப்பிகளையும் சமநிலையில் இயங்கச் செய்வதால், இதற்கு மாஸ்டர் சுரப்பி என்று பெயர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்