பற்களை சிதைக்கும் 8 பழக்கங்கள்

ற்கள் நம் முகத்தை அழகாகக் காட்டும் அற்புத உறுப்பு. ஜீரணம் எனும் செயல் நடக்க உதவும் முதல் போர் வீரன். இன்று, இரண்டில் ஒருவருக்குப் பல் பாதிப்பு இருப்பதாகச் சொல்கிறது ஆய்வு ஒன்று. இது, பல் பராமரிப்பில் நமக்கு உள்ள அலட்சியத்தைக் குறிக்கிறது. நம் பற்களைப் பாதிக்கும் 8 காரணங்கள் என்னென்ன... 

இனிப்புகள்

அதிகப்படியான இனிப்புகள் சாப்பிடுவதால் பற்சொத்தை, பற்சிதைவு ஏற்படுகின்றன. இனிப்புகளில் உள்ள அமிலங்கள் பல்லின் பாதுகாப்புக் கவசமான எனாமலில் படிந்து, அதை அரித்துவிடும். பசை போன்ற சில இனிப்புகள் பற்களில் ஒட்டிக்கொண்டு தொந்தரவை ஏற்படுத்தும். இனிப்புகளையோ நொறுக்குத்தீனிகளையோ தனியாகச் சாப்பிடாமல், உணவோடு சேர்த்துச் சாப்பிடும்போது வாயில் அதிகப்படியான உமிழ்நீர் சுரந்து, அந்த இனிப்புகளைப் பற்களில் சேரவிடாது. சாக்லேட் போன்ற இனிப்புகளைச் சாப்பிடுவதுதான், குழந்தையிலேயே பற்சொத்தை ஏற்படக் காரணம். இதைத் தவிர்க்க இனிப்பு சாப்பிட்டதும் வாய் கொப்பளிக்க வேண்டும்.

சாஃப்ட் டிரிங்க்ஸ்

சோடா, கோலா போன்ற கார்பனேட்டட் பானங்களில் அதிக அமிலத்தன்மை இருப்பதால், பற்களின் எனாமலை அரித்துவிடும். எனவே, இவற்றைத் தவிர்த்து இளநீர், பழச்சாறுகள் போன்றவற்றைக் குடிக்கலாம்.

காபி மற்றும் சிகரெட்

காபியில் உள்ள அடர் நிறம் பற்களை எளிதில் மஞ்சள் அல்லது காபி நிறத்துக்கு மாற்றக்கூடியது. இதில் இருக்கக்கூடிய அமிலம் பற்களை அரிக்கும். அதே போன்று புகைபிடிப்பவர்களுக்கும் ஈறுகளில் பிரச்னை ஏற்பட்டு, பற்கள் விழுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். பாக்கு போன்றவை பற்களில் காரையை ஏற்படுத்தி, ஈறுகளின் வலிமையைப் பாதித்துவிடும். இவற்றைத் தவிர்ப்பது நல்லது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்