உணவின்றி அமையாது உலகு - 18

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ந்த உலகில் நம் வேலை என்ன? இது ஏதோ ஆன்மிகத் தேடலைத் தூண்டும் கேள்வி என்று புரிந்துகொள்ள வேண்டாம். அறிவுத்தேடலுக்கான சாதாரணக் கேள்வி. நம் நடைமுறைகளில் இருந்து யோசியுங்கள். பதில் எளிமையானது.

உணவைத் தருவதும், பசியைத் தருவதும் இயற்கை. பசியை செயற்கையாக நாமே தூண்டிக்கொள்ள முடியாது. இயற்கையின் படைப்பில் இரண்டு நேரெதிரான தன்மையும் தானே உருவாகின்றன. உணவுத் தேவையை உணர்த்தும் பசியும், பசியைப் போக்கும் உணவும் இயற்கையின் படைப்புகள். உணவிலும் எத்தனை வகைகள்? ஆறு சுவைகள், விதவிதமான குணங்கள். ஆறு சுவை என்று எண்ணிக்கைக்காக சொல்லிக்கொள்ளலாமே தவிர, ஒவ்வொரு சுவையிலும் ஆயிரம் வகை உண்டு. இனிப்பில் எத்தனை வகை? புளிப்பில் எத்தனை வகை?

ஆக, இயற்கை உணவுகளைக் கொடுத்துள்ளது. அதனைப் பயன்படுத்த பசியையும் தந்திருக்கிறது. இப்போது சொல்லுங்கள்... நம் வேலை என்ன? சாப்பிடுவதுதான். இது வேடிக்கை அல்ல. உண்மையிலேயே மனிதர்களின் பிரதானமான வேலையே சாப்பிடுவதுதான். அறிவின் அடுத்த நிலையை அடைய வேண்டுமானால், அடிப்படை வேலையான உணவு உண்ணுதலை நிறைவு செய்ய வேண்டும். பசி வந்தால் பத்தும் பறந்து போகும் அல்லவா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்