உடலினை உறுதிசெய் - 16

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

திரிகோணாசனா (Trikonasana)

திரிகோணாசானம் என்பது, `உடலை முக்கோண வடிவத்துக்கு வளைத்தல்’ என்பதாகும்.

கால்களை நன்கு அகட்டி நேராக நிற்க வேண்டும்.  மூச்சை இழுத்தபடி இரண்டு கைகளையும் பக்கவாட்டில் தோள்பட்டைக்கு இணையாக உயர்த்த வேண்டும்.  மூச்சை வெளியேவிட்டபடி, உடலை வளைத்து, வலது கையால் இடது காலைத் தொட வேண்டும். அதேநேரத்தில், இடது கையுடன் சேர்த்து, மேல் உடலை மேலே உயர்த்த வேண்டும்.  பார்வை மேலே உள்ள கையைப் பார்த்தபடி இருக்கட்டும். மெதுவாக மூச்சை இழுத்து, பழையநிலைக்கு இரண்டு கைகளையும் நேராக நிறுத்த வேண்டும். பின்னர் மூச்சை வெளிவிட்டபடி முதல் நிலைக்குத் திரும்ப வேண்டும். பின்னர், இதேபோல, மற்றொரு பக்கம் செய்ய வேண்டும். இந்தப் பயிற்சியை மூன்று முறை செய்யலாம்.

கவனிக்க: ஒற்றைத் தலைவலி, வயிற்றுப்போக்கு, ரத்தஅழுத்தம், கழுத்து, முதுகில் பிரச்னை இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்