புத்துணர்வு தரும் வாழை இலைக் குளியல்!

‘கசகசன்னு... வியர்வையே பிடிக்காது... என்பவரா நீங்கள்? வியர்வை அசௌகரியம் அளிப்பது அல்ல... அது நம் ஆரோக்கியத்தின் வெளிப்பாடு.  வியர்வை வரும்போது, சருமத்தில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. எந்த அளவுக்கு வியர்வையை வெளியேற்றுகிறோமோ, அந்த அளவுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், ஆரோக்கியம் பெருகும். எப்போதும் ஏ.சி அறையில் இருப்பதால், பலருக்கும் வியர்ப்பதே இல்லை. இதனால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறாமல் தங்கிவிடுகிறது. இதுவே, பல நோய்களுக்கு வழிவகுத்துவிடுகிறது. மேற்கத்திய நாடுகளில் அதிகக் குளிர் என்பதால், வியர்வை வெளியேறுவது குறைவாக இருக்கும். இதனால், அவர்கள் சோனாபாத், ஸ்டீம்பாத் எனப் பல வகையான ஸ்பாக்களுக்கு (குளியல்கள்) செல்வார்கள்.

நம் ஊரில் அதற்கு இணையாக, இயற்கை ஸ்பாக்கள் உள்ளன. அதில் ஒன்று வாழை இலைக் குளியல். வாழை இலையில் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் உள்ள பாலிபீனால் மிகச்சிறந்த ஆன்டிஆக்ஸிடன்டாகவும், சிறந்த கிருமிநாசினியாகவும் செயல்படுகிறது. கார்பன்டை ஆக்ஸைடை ஈர்த்து, ஆக்சிஜனை வெளியிடும் அளவு வாழையில் அதிகம். அதனால், உடலில் உள்ள கெட்ட வாயு, கழிவுகளை வெளியேற்றுகிறது. சருமத்துக்கு நண்பனாக இருந்து, புண்களை ஆற்றுகிறது என்பதால், வாழை இலைக் குளியல் மிகவும் சிறந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்