வீட்டிலேயே ஃபிட்டாகலாம்!

ஈஸி வொர்க்அவுட்ஸ்

‘உடற்பயிற்சியின் முக்கியத்துவம் பற்றி நமக்கு நன்றாகவே தெரியும். தினசரி வாழ்வில் சரியான அளவில் உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தால், உடலின் எனர்ஜி அளவு அதிகரிக்கும். இது மனதின் ஆரோக்கியத்தையும் காக்கும். ஆனால், நாம் செய்கிற மிகப்பெரிய தவறு, உடற்பயிற்சிக்கு முன்பு போதுமான முன் தயாரிப்புப் பயிற்சிகளை செய்வது இல்லை. இதனால், தசைகள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்படுகின்றன.

நம் உடலில் 600-க்கும் மேற்பட்ட தசைகள் உள்ளன. இந்தத் தசைகள்தான் நம்முடைய இயக்கத்துக்கு உதவியாக இருக்கின்றன. நடக்க, விளையாட, எந்த ஒரு செயலையும் செய்ய, தசைகளின் இயக்கம் தேவை. தசைகள் ஆரோக்கியமாக இருந்தால்தான், நம்மால் இயங்கவும், வலிமையானவர்களாக இருக்கவும் முடியும். வலிமையான தசைகள் நம் உடல் ஃபிட்டாக இருக்கவும் காரணமாக இருக்கின்றன.

``உடற்பயிற்சிக்கு முன்புதான் ஸ்ட்ரெச்சிங் செய்ய வேண்டும் என்று இல்லை. உடற்பயிற்சி செய்யாதவர்கள்கூட ஸ்ட்ரெச்சிங் பயிற்சி செய்யலாம். நம் உடலே சமயத்தில் சில ஸ்டிரெச்சிங்கைக் கேட்கும். அதைச் சோம்பல் முறித்தல் மூலம் நிறைவேற்றுவது அப்படித்தான்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்