குழந்தையைப் பாதிக்கும் குறைப்பிரசவம்!

தாய்-சேய் நலம் காப்போம்!ஹெல்த்

ர்ப்ப காலம் என்பது ஒரு பெண்ணின் வாழ்வில் மிகவும் அற்புதமான காலகட்டம். கர்ப்பம், ஓர் அதிசயம். ஒரு செல்லில் இருந்து, ஒரு முழுமையான மனிதனாக உருப்பெறும் அற்புதமான பயணம் கர்ப்ப காலம். கடைசியாக மாதவிலக்கு வந்த நாளில் இருந்து, 37வது வாரத்தில் ஆரம்பித்து 40 வாரங்களுக்குள் குழந்தை பிறப்பு நிகழும்போது தாய்-சேய் நலம் பாதுகாக்கப்படுகிறது. இதுவே, 37 வாரங்களுக்கு முன்னதாகக் குழந்தை பிறக்கும்போது, குழந்தையின் நலம் பாதிக்கப்படலாம். இப்படி முன்னதாகப் பிறப்பதை `குறைப்பிரசவம்’ (Preterm delivery) என்கிறோம். ‘உலகம் முழுதும் ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட ஒன்றரை கோடி குறைப்பிரசவங்கள் நிகழ்கின்றன. இதில், 10 லட்சம் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற முடியாமல்போகிறது’ என்கிறது உலக சுகாதார நிறுவனம். வளர்ந்த நாடுகளில் குறைப்பிரசவக் குழந்தைகளில் 100-ல் 90 குழந்தைகள் காப்பாற்றப்பட்டு, ஆரோக்கியமாக இருக்கிறார்கள். ஆனால், ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் பிற தெற்கு ஆசிய நாடுகளில் 100-ல் 10 குழந்தைகள் மட்டுமே காப்பாற்றப்படுகின்றனர். நஞ்சுக்கொடி பாதிக்கப்படுவதால்தான் பெரும்பாலான குறைப்பிரசவங்கள் நிகழ்கின்றன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்