ஹெல்த்தி ஷாப்பிங்

ஹெல்த்

நோய்க்கு சிகிச்சை அளிப்பதுடன், வரும்முன் காப்பதைப் பற்றி பேசுபவை நம் பாரம்பரிய மருத்துவங்கள். அந்த வகையில் உடலின் ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, சுரப்பிகளைத் தூண்டி, புத்துணர்ச்சியோடு இருக்க உதவுபவை அக்குபிரஷர் கருவிகள். புத்துணர்வு எப்போதும் குடியிருக்க, அவசியம் வைத்திருக்கவேண்டிய சில பொருட்கள் இங்கே...

நாவல் டம்ளர் - ரூ185

நாவல் மரத்தில் செதுக்கப்பட்ட டம்ளர் இது. இதில், நீர் அருந்துவதால், சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். சர்க்கரை நோய் வராமல் தவிர்க்கவும் முடியும். காலை, மாலையில் உணவுக்கு இரண்டு மணி நேரம் முன், நீர் ஊற்றிவைத்து, குடித்துவந்தால், நல்ல பலன் கிடைக்கும். ஒரு வருடம் வரைக்கும் பயன்படுத்தலாம்.

கை மரப்பந்து - ரூ30

நெருஞ்சி முள் போன்ற அமைப்புடன் உள்ள இந்த மரப்பந்தை கைகளில் வைத்து உருட்ட வேண்டும். நரம்புகள் சங்கமிக்கும் இடம் கை என்பதால், ரத்த ஓட்டம் மேம்படும். இதனைச் செய்யும்போது, நீர்ச்சத்து அதிகம் தேவைப்படும் என்பதால், கட்டாயம் நீர் அருந்த வேண்டும். தினமும் அதிகபட்சம் 21 நிமிடங்கள் மட்டுமே இதனைச் செய்ய வேண்டும்.

கை உருளை - ரூ100

மரக்கட்டையால் செய்யப்பட்ட இதை கையில் பிடித்துக்கொண்டு, உடலின் எந்தப் பகுதியிலும் அழுத்தி உருட்டலாம். கை, கால், முதுகு எனச் சோர்வாக இருக்கும் பகுதியில் அழுத்தி உருட்டினால், அங்கு உள்ள நரம்புகள் தூண்டப்பட்டு, வலி குறையும். இதனைச் செய்வதற்கு முன்னர் நீர் அருந்த வேண்டியது அவசியம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்