100 ஹெல்த்தி ஹேபிட்ஸ்

‘நாம் நல்ல பழக்கங்களை உருவாக்குவோம்; நல்ல பழக்கங்கள் நம்மை உருவாக்கும்’ என்கிறார் பிரபல ஆங்கிலக் கவிஞர் ஜான் டிரைடென். ‘இதைச் செய்யலாமா... அதைச் செய்யலாமா?’ என நமக்கு ஒரு நாளில் பல வாய்ப்புகள் (சாய்ஸ்) இருக்கின்றன. அதில், எதைத் தேர்ந்தெடுக்கிறோமோ, அதைப் பொறுத்துதான் அந்த நாள் அமையும். நாம் எதைச் சிந்திக்கிறோமோ... அதுவே செயலாகிறது; நாம் எதைச் செய்கிறோமோ... அது வழக்கமாகிறது; நாம் எதை வழக்கமாக வைத்திருக்கிறோமோ... அது நம் குணாதியசமாகிறது. எனவே, நம்மை வடிவமைப்பவை நம் எண்ணங்களும் பழக்கவழக்கங்களும்தான். நல்ல பழக்கங்கள் நம் வசமாக, அவற்றை நாம் பின்பற்ற வேண்டும் என்ற எண்ணமும் செயலும் முக்கியம்.

ஒரு நாளை எவ்வாறு செலவிடுகிறோம் எனப் பட்டியலிட்டுப் பாருங்கள். குழந்தைப் பருவத்திலிருந்து தொடங்கிய பழக்கங்கள் என்னென்ன... வளரும் பருவத்தில் கற்றுக்கொண்டவை என்னென்ன... நண்பர் மற்றும் உறவினர்களிடமிருந்து கற்றுக்கொண்டவை என்னென்ன? சிந்தித்துப்பாருங்கள்.

தூங்கச் செல்லும் முன் பல் தேய்ப்பது, வெளியில் செல்லும்போது ஷூ, ஸ்லிப்பரைத் துடைப்பது இப்படியான நல்ல பழக்கங்கள் முதல், புகை பிடித்தால்தான் இந்த நட்பு வட்டாரத்தில் நம்மை மதிப்பார்கள், மது அருந்துவது, பார்ட்டிக்குப் போவதுதான் நாகரிகம் என்பன போன்ற கெட்ட பழக்கங்கள் வரை எத்தனை விஷயங்களை நாம் மறுபரிசீலனை இன்றி வைத்துக்கொண்டிருக்கிறோம். சிலர், `வீட்டில் குழந்தைகள் அதிகமாக டி.வி பார்க்கின்றனர்’ எனப் புகார் சொல்வார்கள். உண்மையில், பெற்றோர் பார்ப்பதால்தான் குழந்தைகளுக்கும் டி.வி பார்க்கும் பழக்கம் வந்திருக்கும். நல்ல பழக்கங்களைக் கற்றுக்கொள்வதும், தீய பழக்கங்களை கைவிடுவதும் நமது முயற்சியில்தான் உள்ளன. அன்றாட வாழ்வில் பின்பற்ற வேண்டிய நல்ல பழக்கங்கள் என்னென்ன... கவனம் இல்லாமல், விழிப்புஉணர்வு இல்லாமல் செய்யும் தவறுகள், பழகிவிட்ட பழக்கங்களால் நமக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன... அவற்றைத் திருத்திக்கொள்வது எப்படி என்பதைப் பற்றி விளக்குகிறார், மனநல மருத்துவர் கார்த்திகேயன்.

நகங்களைக் கடிப்பது


1. சிலர் `எதையாவது யோசிக்கும்போது, டென்ஷனாக இருக்கும்போது, நகங்களைக் கடிக்கிறேன்’ என்று சொல்வார்கள். கிருமிகள் வாழ ஏற்ற இடங்களில் நகங்களும் ஒன்று. நகம் கடிப்பதால், அதில் உள்ள கிருமிகள் வாய் வழியே வயிற்றுக்குள் செல்லும். கல்லீரல் பாதிப்பு, வயிற்றில் தொற்று ஏற்படலாம்.
 
2. நகங்களின் அமைப்பில் மாற்றம் ஏற்படும். நகங்களின் வளர்ச்சியும் பாதிக்கப்படும். நகங்களைச் சுற்றி உள்ள இடங்களும் பாதிப்புக்குள்ளாகும். நகங்களின் நிறத்தில் மாறுதல் ஏற்படும்.

3. நகம் கடிப்பவர்கள், இந்த பழக்கத்திலிருந்து விடும்படும்வரை, தரமான நெய்ல் பாலீஷ் பூசலாம். (மற்றவர்கள் நெய்ல் பாலீஷ் போடுவதைத் தவிர்க்க வேண்டும்.)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்