ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

“இந்தியாவில் ஆண்களுக்கு ப்ராஸ்டேட், பெண்களுக்கு மார்பகம், கர்ப்பப்பைவாய் புற்றுநோய் அதிகமாகக் காணப்படுகின்றன. புற்றுநோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை பற்றிய பல தயக்கங்கள், சந்தேகங்கள் பலருக்கும் உள்ளன. புற்றுநோய் ஆரம்பநிலையில் அறிகுறிகளை வெளிப்படுத்தாது. புற்றுநோய் பாதிப்பு சந்தேகம் இருந்தால், ரத்தப் பரிசோதனை, பயாப்ஸி எடுக்க வேண்டும். புற்றுநோய் என உறுதியானால் அறுவைசிகிச்சை, கீமோதெரப்பி, ரேடியேஷன் என மூன்றுவித சிகிச்சைகள் உள்ளன” என்கிறார், புற்றுநோய் அறுவைசிகிச்சை நிபுணர் எஸ்.ஜி.பாலமுருகன்.

“கீமோதெரப்பியில் புற்றுநோயைக் கரைக்கும் ஊசி, மருந்துகள் தரப்படும். ரேடியேஷனில் கதிரியக்கங்கள் மூலமாக கட்டி பொசுக்கப்படும், அறுவைசிகிச்சையில் புற்றுநோய் பாதிப்புள்ள பகுதி அகற்றப்படும். யாருக்கு என்ன மாதிரியான சிகிச்சை தேவை என்பதை மருத்துவர்கள்தான் முடிவுசெய்வார்கள். புற்றுநோயைக் குணப்படுத்த முடியும். புற்றுநோயாளிகளை அன்புடன் பார்த்துக்கொள்வதுடன், ஊக்கம் அளிப்பதும் அவர்களுக்கான தன்னம்பிக்கையை அளிக்கும். நோயிலிருந்து சீக்கிரம் மீண்டு வர வாய்ப்பாக அமையும்” என்கிறார் மருத்துவர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்