உடலினை உறுதிசெய் - 10

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
நௌகாசனா

‘நௌகா’ என்றால் சமஸ்கிருதத்தில் `படகு’ என்று அர்த்தம். படகு போன்று உடலை வளைக்கும் ஆசனம் இது. தரையில் மல்லாந்து படுக்க வேண்டும். கைகளை உடலுக்குப் பக்கவாட்டில் தரையைப் பார்த்தபடி வைக்க வேண்டும். மூச்சை இழுத்து நிறுத்தியபடி, மேல் மற்றும் கீழ் உடலை ஒரே நேரத்தில் உயர்த்த வேண்டும். அதாவது, கால், கை, தோள்பட்டை, மார்பகம், தலை, கழுத்து ஆகியவற்றை உயர்த்த வேண்டும். இடுப்பு மற்றும் பின்பகுதியால் முழு உடலையும் தாங்கியபடி இருக்க வேண்டும். இது பார்க்க, படகு போன்ற தோற்றத்தைத் தரும். 10 விநாடிகள் அப்படியே இருந்துவிட்டு, மூச்சை வெளியே விட்டபடி பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். சில விநாடிகள் படுத்து ஓய்வு எடுத்துவிட்டு, மீண்டும் செய்ய வேண்டும். இதை, மூன்று முறை செய்யலாம்.

கவனிக்க: ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்கள், இடுப்பு வலி, மூட்டுவலி, அதீதத் தலைவலி, குடலிறக்கம், அல்சர் பிரச்னை உள்ளவர்கள், இந்தப் பயிற்சியைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்