சமைத்த உணவை சூடுபடுத்தலாமா?

ணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் வீடுகளில், காலையில் சமைத்த உணவையே, இரவும் எடுத்துக்கொள்வது அல்லது இரவு சமைப்பதை அடுத்த நாளைக்குச் சூடுபடுத்தி எடுத்துக்கொள்வது தவிர்க்க முடியாததாகிவிட்டது. பல வீடுகளில், பாலை வாங்கிக் காய்ச்சுவதும், பின்னர் தேவைக்கு ஏற்ப அதை மீண்டும் சூடுபடுத்திக்கொள்வதும் உண்டு.

இப்படி உணவை அடிக்கடி சூடுபடுத்துவது ஆரோக்கியமான விஷயம் அல்ல. குறிப்பாக, முறையாகக் குளிரூட்டப்படாத, பாதுகாக்கப்படாத உணவுகளை அடிக்கடி சூடுபடுத்திச் சாப்பிடுவது, உடல்நலத்துக்கு உலைவைத்துவிடும்.

ஏன் உணவை அடிக்கடி சூடுபடுத்தக் கூடாது?

உணவுப் பொருளைத் தகுந்த பக்குவத்துக்குச் சமைக்கிறோம். உணவில் இருக்கும் நுண்கிருமிகள் இந்தச் செயல்முறையால் அழிக்கப்படுகின்றன. இந்த உணவை உடனே உட்கொள்ளும்போது பாதிப்பு ஏதும் இல்லை; ஆறு  முதல் எட்டு மணி நேரத்துக்கு வைத்திருந்தோம் என்றால், அதில் மீண்டும் நுண்கிருமிகள் வளரத் தொடங்கிவிடும்.

இந்த தட்பவெப்பநிலை பாக்டீரியா மற்றும் நுண்கிருமிகள் பல மடங்கு வேகமாக வளரப் போதுமானதாக இருக்கிறது. உணவை மீண்டும் சூடுபடுத்தினாலும், கிருமிகள் அழியும் அளவுக்கு அதை நாம் நீண்ட நேரம் அடுப்பில் வைப்பது இல்லை. இதனால், இந்த உணவே நஞ்சாக மாறிவிட வாய்ப்பு உள்ளது. அதாவது, ஃபுட் பாய்சன் ஆகிவிடும். இதனால், வயிற்றுவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். சமைக்கும்போது நாம் பயன்படுத்தும் எண்ணெயை மீண்டும் சூடுபடுத்தும்போது, உணவில் உள்ள சத்துக்களும் சிதைந்துவிடும். உணவின் ருசியும் மணமும்கூட மாறிவிடும். நீரில் கரையும் வைட்டமின்கள் சாதாரணமாகச் சமைக்கும்போதே அழிந்துவிடும். இந்த நிலையில், மீண்டும் மீண்டும் சூடேற்றும்போது, இருக்கும் சிறிதளவு சத்துக்களும் முற்றிலும் சிதைந்துவிடும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்