மருந்தில்லா மருத்துவம் - 8

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
விஷுத்தி சக்கரம்

னாஹதச் சக்கரத்தை அடுத்து, 7 முதல் 11 வயது வரை மலர்வது, விஷுத்தி. தொண்டைப் பகுதியில் நீல வண்ணம் உடைய இதழ்களுடன் இது அமைந்துள்ளது. விஷுத்தி என்றால், `மிகவும் தூய்மையானது’ எனப் பொருள். இந்தச் சக்கரம் தைராய்டு, பாரா தைராய்டு என்ற இரண்டு நாளமில்லா சுரப்பிகளைச் சார்ந்தது.

தைராய்டு சுரப்பி டி3, டி4 எனும் ஹார்மோன்களைச் சுரக்கிறது. உணவில் உள்ள அயோடின், தைராய்டு செல்களால் ஹார்மோனாக மாறுகிறது. உடல் உறுப்புகளின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான ஹார்மோன் சுரப்பி தைராய்டு ஆகும். உணவில் உள்ள அயோடினும் கடல் உப்பில் உள்ள தாதுஉப்பும், நுண்ஊட்டச்சத்தும் தைராய்டு சுரப்பியை வலுவுறச்செய்யும். தைராய்டு சுரப்பியின் ஒரு பாகமாக அமைந்திருக்கும் ஒரு சிறிய ஹார்மோன் சுரப்பி, பாரா தைராய்டு. இது, எலும்பின் உறுதிக்குத் தேவையான கால்சியத்தை உணவில் இருந்து கிரகிக்க உதவுகிறது.

விஷுத்திச் சக்கரத்தைச் சார்ந்த தொண்டைப் பகுதியில் உள்ள மற்ற உறுப்புகள், டான்சில், குரல்வளை, செரிமான மண்டலம் மற்றும் சுவாச மண்டலத்துக்குப் பொதுவான உறுப்பான பாரின்க்ஸ் (Pharynx), உணவுக்குழல் ஆகும்.

விஷுத்தி, மற்ற நான்கு சக்கரங்கள் மலர்ந்து வளர்ச்சியடையும் தருணத்தில் ஏற்படும் உணர்ச்சிகளை ஒருங்கிணைக்கும். இந்தச் சக்கரத்தால்தான் குரல்வளை மேம்பட்டு பேச்சுத்திறன், கலைத்திறன் வெளிப்படுகிறது. இந்தப் பருவத்தில் மழலை மாறி, மனதில் உள்ளவற்றைக் கோர்வையாகப் பேசும் திறன் அதிகரிக்கும். கலைகளைக் கற்று, அதில் தேர்ச்சி பெற இந்தச் சக்கரத்தின் திறன்தான் காரணம்.
ஆனால், இது மலரும் பருவத்தில் குழந்தையைத் தேவைக்கு அதிகமாகக் கண்டித்தால், தாழ்வு மனப்பான்மை தோன்றும். இதனால், திக்குவாய் தோன்றலாம். இதே சூழ்நிலை ஒரு சில குழந்தைகளுக்குக் காழ்ப்புஉணர்ச்சியைத் தூண்டி, தேவை இல்லாமல் மற்றவருடன் சண்டை போடுவது, பொய் சொல்வது, தான் எனும் அகங்காரத்தால் மற்றவர்களைப் பேச்சில் அதிகாரம் செய்வது, அடக்குவது போன்ற குணங்கள் வளரும். விஷுத்திச் சக்கரத்தின் சுழற்சியைச் சரிசெய்து, மனம் சார்ந்த இந்தப் பிரச்னைகளைச் சரிசெய்யலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்