அதிகரிக்கும் வன்முறை... அன்பால் அரவணைப்போம்!

ரு படத்தில், `உனக்குள்ள நடமாடிக்கிட்டு இருக்கிற மிருகம், எனக்குள்ள தூங்கிக்கிட்டு இருக்கு... எழுப்பிடாத’ என்பார் கமல்ஹாசன். அது உண்மையே... நம் ஒவ்வொருவருக்குள்ளும் மிருகத்தன்மை இருக்கிறது. மனிதன், நாகரிகம் உருவாவதற்கு முன் விலங்கு போலத்தான் வாழ்ந்துவந்தான். அந்த மிருகத்தன்மை இன்றும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. நாகரிகம், சமூகக்கட்டுப்பாடு போன்ற காரணங்களால் மறைந்திருக்கும் இந்தக் குணம், சூழ்நிலை மாறும்போது வெளிப்படுகிறது. எப்போதாவது, எதிர்பாராத கணத்தில் வன்முறை எண்ணம் தலைதூக்குவது இயல்பான விஷயம்தான். ஆனால், அதுவே ஒரு குணமாகத் தொடரும்போது, சமூக விரோத ஆளுமைக் குறைபாடு (Anti social personality disorder - ASPD) என்ற பிரச்னையாக மாறுகிறது.

மற்றவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுமே, கஷ்டப்படுவார்களே என்ற எண்ணம் துளியும் இன்றி, மற்றவர்களிடம் வன்முறையில் ஈடுபடுபவர்கள், சட்டத்துக்குப் புறம்பான காரியங்களில் ஈடுபடுபவர்கள், எந்தக் குற்றவுணர்வும் இன்றி இவை அனைத்தும் மிகச் சரி என்ற மனநிலையில் இருப்பவர்களை  `ஏ.எஸ்.பி.டி பிரச்னை உள்ளவர்கள்’ என்கிறோம். இளம் வயதிலேயே இந்தப் பிரச்னை ஏற்படலாம். பொதுவாக, 20 முதல் 30 வயதில் சிலருக்கு இந்தப் பிரச்னை தொடங்கும் அல்லது வெளிப்பட ஆரம்பிக்கும். இந்தப் பிரச்னை அதிக அளவில் ஆண்களிடமே காணப்படுகிறது.

இவர்களுக்கு, மனிதர்களிடம் மட்டும் அல்ல... விலங்குகளிடம்கூட எந்தவித அனுதாபமோ, இரக்கமோ இருக்காது. குழந்தைகளிடம்கூட முரட்டுத்தனமாக நடந்து கொள்வார்கள். இவர்கள், சமுதாயத்தில் வன்முறையில் அதிகம் ஈடுபடுவார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்