டயப்பர் டெர்மடைடிஸ்

பாப்பா பத்திரம்

பிஞ்சுக்குழந்தைகளுக்கு சுத்தமான பருத்தித் துணியைக் கட்டிவிட்டு, அது நனைந்ததும் துவைத்து, உலர்த்தி மீண்டும் பயன்படுத்திய காலம் மலையேறிவிட்டது. எப்போதாவது வெளியூர் செல்லும்போது மட்டுமே டயப்பர் பயன்படுத்திய காலமும் போய், தற்போது எந்த நேரமும் டயப்பரோடுதான் இருக்கிறார்கள் குழந்தைகள். ஒரே முறை பயன்படுத்துவதால் ஹைஜீனிக்கானது, துவைக்கும் வேலை மிச்சம் போன்ற செளகரியங்கள் இருந்தாலும், வெப்ப மண்டல நாடுகளில், குறிப்பாகக் கோடை காலத்தில் டயப்பர் பயன்படுத்துவது, அவ்வளவு பாதுகாப்பானது அல்ல. இதனால், குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகள் ஏராளம். அவற்றில் முக்கியமானது, டயப்பர் டெர்மடைடிஸ்.

எப்போதும் டயப்பர் அணிந்துகொண்டிருக்கும் குழந்தைகளுக்குத் தோலில் ஏற்படும் பிரச்னைதான் இது. 9 முதல் 12 மாதங்கள் வரை உள்ள கைக்குழந்தைகளே இந்தப் பிரச்னையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். டயப்பரில் சிறுநீரை உறிஞ்ச, சோடியம் பாலி அக்ரிலேட் பயன்படுத்தப்படுகிறது. மேலும், வண்ணத்துக்காகச் சிலவகை டைகளும், நறுமணத்துக்காகச் சில வேதிப்பொருட்களும் சேர்க்கப்படுகின்றன. இவற்றால், குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்படலாம். மேலும், டயப்பரை அடிக்கடி மாற்றாமல் அப்படியேவிடுவதால், பூஞ்சைத் தொற்றும் ஏற்படக்கூடும். இதனாலும், சரும எரிச்சல், ஒவ்வாமை ஏற்பட்டு, குழந்தையின் சருமம் தடித்துப்போகும்.

தொடர்ந்து சருமம் ஈரப்பதத்துடன் இருந்தால், குழந்தையின் பின்புறம், அடிவயிறு, பிறப்புறுப்பு, மேல்தொடை சிவந்து காணப்படும். தொடக்கத்தில் தோல் லேசான சிவப்பு நிறத்தில் இருக்கும். பிறகு, தடிப்பு ஏற்பட்டு, வலி எடுக்க ஆரம்பிக்கும். பிறகு, தோல் உரியத் தொடங்கும். அப்படியே கவனிக்காமல் அலட்சியமாக விட்டுவிட்டால், தொடை மடிப்புகளின் இடையில் உள்ள பகுதி, பூஞ்சைத்தொற்றால் அடர் சிவப்பு நிறத்துக்கு மாறி, மஞ்சள் நிறத் திரவத்தால் ஆன  கொப்புளங்கள் ஏற்படும். தோல் பிளவுபட்டு, சிறுசிறு துகள்களாக உதிரும். குழந்தையின் பிறப்புறுப்பின் மேல் அலர்ஜி உண்டானால், அரிப்புடன் தோல் செதில்செதிலாக உதிரும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்