கணையம் காப்போம்!

ணையம், நம் செரிமான மண்டலத்தின் தளபதி; வயிற்றின் மேல் பகுதியில், இரைப்பைக்குப் பின்னால் அமைந்திருக்கும் ஓர் உறுப்பு. நாளமுள்ள, நாளமில்லா என இரண்டு வகையான சுரப்புக்களையும் செய்யும் ஒரே உறுப்பு கணையம். 250 முதல் 500 கிராம் எடைகொண்ட கணையம், மென்மையான உறுப்புகளில் ஒன்று. உணவு செரிமானம் ஆக உதவும் ஏராளமான என்சைம்களும், ரத்தத்தில் கலக்கும் குளுக்கோஸைத் திசுக்கள் பயன்படுத்த உதவும் இன்சுலின் ஹார்மோனும் கணையத்தில்தான் உற்பத்தியாகின்றன.கணையத்தின் இயக்கத்தில் பாதிப்பு ஏற்படும்போது, வீக்கம் அடைந்து, கணைய அழற்சி (Pancreatitis) ஏற்படுகிறது.

கணைய அழற்சி: உணவு, செரிமானம் ஆகும்போது கணையத்தில் இருந்து ஏராளமான என்சைம்கள் சுரக்கின்றன. இவை, கணையத்தில் இருந்து ஒரு குழாய் வழியே பயணித்து, சிறுகுடலை அடைகின்றன. பித்தப்பையில் இருந்து வரும் குழாயுடன், கணையத்தில் இருந்து வரும் குழாய் சிறுகுடல் அருகே இணைகிறது. பித்தப்பையில் கல் உருவாகி, அது பித்த நாளத்தை அடைக்கும்போது, கணைய என்சைம் பாதையையும் அடைக்கிறது.கணையத்தில் உருவாகும் என்சைம் செயல்திறன் அற்ற நிலையில் இருக்கும். இது, சிறுகுடலை வந்தடைந்ததும் செயல்திறன் பெறும். அதிக ஆற்றல் கொண்டது என்பதால், இயற்கையாகவே இந்த ஏற்பாடு. பித்தப்பை அடைப்புக் காரணமாக, கணைய என்சைம் செல்வதில் தடை ஏற்படும்போது, குழாயிலேயே இந்த என்சைம் செரிவுத் தன்மை பெறும். இது, மீண்டும் கணையத்துக்குத் திரும்பும்போது, செரிவுடன் இருக்கும். இதுவே, கணைய செல்களை அழித்து, வீக்கம் அடையக் காரணமாக இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்