சர்க்கரை நோயாளிகள் கவனிக்க...

தவிர்க்கவேண்டியவை...

ஐஸ்க்ரீம், குளிர்பானங்கள்.

இனிப்புகள் மற்றும் பேக்கரி வகை உணவுகள். 
 
ஃபாஸ்ட் ஃபுட்.

பாக்கெட்டில் அடைக்கப்பட்ட, பதப்படுத்தப்பட்ட உணவுகள், நொறுக்குத்தீனிகள்.

அளவாகச் சாப்பிடவேண்டியவை...

எண்ணெய்: சமையலில் அளவாகச் சேர்த்துக்கொள்ளலாம்.

அரிசி உணவுகள்: ஒரு நாளைக்கு ஒரு வேளை எடுத்துக்கொள்ளலாம். முடியாதவர்கள், இரண்டு வேளை மட்டுமே உணவுகளை மிகக் குறைந்த அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.

பழங்கள்: முக்கனிகள், சப்போட்டா ஆகியவற்றைத் தவிர்த்து, மற்ற பழங்களைச் சாப்பிடலாம். பழங்களைப் பொடியாக நறுக்கியோ, ஜூஸாவோ சாப்பிடக் கூடாது.

அசைவ உணவுகள்: அசைவ உணவு விரும்பிகள் எண்ணெயில் பொரிப்பதைத் தவிர்த்து, மிகக் குறைந்த அளவில், வேகவைத்துச் சாப்பிடலாம்.

- பு.விவேக் ஆனந்த்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick