ஸ்வீட் எஸ்கேப் - 9

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சர்க்கரையை வெல்லலாம்

துவரை சர்க்கரை நோய் தொடர்பான பொதுவான விஷயங்களைப் பற்றி பார்த்துவந்தோம். இனி, சர்க்கரை எப்படி நம் உடலின் முக்கிய உறுப்புகளில் செயல்படுகிறது, பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதைப் பற்றி பார்ப்போம். முதலில், உலகைக் காணும் ஒளியாக, வாசலாக இருக்கும் கண்கள்.

டிஜிட்டல் கேமரா எப்படி வேலை செய்கிறதோ, அதுபோல, சிறிய உருளை வடிவத்தில் அமைந்திருக்கும் கண்கள் ஒளி சிக்னலை பெற்று எலக்ட்ரோ கெமிக்கல் சிக்னலாக மாற்றி விழித்திரையில் (Retina) இருந்து மூளைக்கு ஆப்டிக் நரம்புகள் வழியாக அனுப்புகின்றன. இதை இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ள விழித்திரைப் பற்றி தெரிந்துகொள்வது அவசியம். விழித்திரை என்பது கண்ணின் கடைசிப் பகுதியில் அமைந்திருக்கும் ஒளி உணர் பகுதி. வெளிப்புற சுற்றுச்சூழலில் இருந்து வரும் ஒளி சிக்னலானது கண் உருண்டையில் உள்ள திரவ அறைகள் (Vitreous fluid) வழியாகப் பயணித்து, விழித்திரையில் விழுகிறது. அங்கு அது, எலக்ட்ரோ கெமிக்கல் சிக்னலாக மாற்றப்பட்டு ஆப்டிக் நரம்புகள் வழியாக மூளைக்குக் கொண்டுசெல்லப்படுகின்றன. இவை அனைத்தும் மிகமிக வேகமாக, ஒரு நொடிக்குக் குறைவான நேரத்தில் நடக்கின்றன. 

நம் விஷயத்துக்கு வருவோம். ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதன் மூலம் நம் கண்களில் என்ன நடக்கிறது?

சர்க்கரை நோயாளிகளுக்கு டயாபடீக் ரெட்டினோபதி (Diabetic retinopathy) என்ற பிரச்னை ஏற்படுகிறது. அதாவது, உயர் சர்க்கரை அளவு, கண்ணின் விழித்திரைக்குச் செல்லும் மிக நுண்ணிய ரத்தக்குழாய்களில் சேதத்தை ஏற்படுத்துகிறது. இதன் மூலம் ஒரு கட்டத்தில் பார்வை இழப்பு ஏற்படுகிறது. பெரியவர்களில் பார்வை இழப்பு ஏற்பட முக்கியக் காரணம் இது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்