மருந்தில்லா மருத்துவம் - 9

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
பின்-விஷுத்திச் சக்கரம் - கழுத்து வலி

மார்புக்கூட்டையும் தலையையும் இணைப்பது கழுத்து. கழுத்து வலுவாக இருந்தால்தான், தலை அசைவு நல்ல நிலையில் இருக்கும். பின்-விஷுத்திச் சக்கரம் கழுத்துப் பகுதியைச் சார்ந்தது. கழுத்தில் ஏழு கழுத்து எலும்புகள் உள்ளன. இவற்றுக்கு இடையே உள்ள குறுத்தெலும்புகள் எலும்பு தேய்மானம் அடையாமல் பாதுகாக்கின்றன. இதனுள் தண்டுவடத்தைக் காக்கும் அடர்ந்த தசைகள் உள்ளன. தண்டுவடத்தில் இருந்து வரும் இந்தத் தசைகளை ஊடுருவும் நரம்புகள், இதனிடையே மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்கள் என இவை யாவும் ஒன்றிணைந்த உறுப்புதான் கழுத்து. கழுத்துப் பகுதியில் இருந்து வெளிவரும் நரம்புகள், அதற்குக் கீழ் உள்ள மார்புப் பகுதியில் இருந்து வெளிவரும் நரம்புகளுடன் இணைகின்றன. இப்படி ஒன்று சேரும் நரம்புகள், தோள்பட்டையின் உட்பகுதியில் இணைந்து, பல நரம்புகளாகப் பிரிகின்றன. இப்படிப் பிரியும் நரம்புகள் தோள்பட்டையில் இருந்து கைவிரல்கள் வரை நீண்டு, கைகளை வலுவடையச் செய்கின்றன. ஏன் இந்த விளக்கம் என்றால், பின்-விஷுத்திச் சக்கரம், கழுத்து மட்டும் இன்றி இரண்டு கைகளையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. சில குழந்தைகளுக்கு குப்புறப் படுக்கும் பருவம், தவழும் பருவத்தில் (6-9 மாதம் வரை) கழுத்தை அசைக்க முடியாமல் இருக்கும். இந்தக் குழந்தைகளால் எழுந்து நடக்க முடியாது. நாளடைவில், உடல் வளர்ச்சி இருந்தாலும். தானாக எழ முடியாது. படுத்த படுக்கையாகவே இருப்பார்கள். இந்தக் குழந்தைகளுக்குப் பிறந்தவுடன் மூலாதாரச் சக்கரத்தின் சுழற்சியால் சக்தி, தண்டுவடத்தின் வழியாக மூளைக்குச் செல்லும் பாதையில் பாதிப்பு இருக்கும். இதைப் பிறவி ஊனம் (Congenital abnormality) என்பர். இதற்கு, மூலாதாரச் சக்கரத்துக்கு ரெய்கி சிகிச்சை முதலில் அளிக்க வேண்டும். மூலாதாரத்தின் பாதிப்பு அகலும்போது, கழுத்து இறுக்கம் குறைந்து, கழுத்து அசைவதால், நோய் தீவிரம் அடையும் முன்னரே, நிவாரணம் கிடைக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்