ஸ்டார் ஃபிட்னெஸ்

பாலிவுட்டில் இப்போது ‘யங், ஹாட்’ நடிகை யாரென்றால், கூகுளே கைப்பிடித்து அலியா பட் வீட்டுக்கு அழைத்துச் செல்லும். `ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர்’, `ஹைவே’, `2 ஸ்டேட்ஸ்’ என வரிசையாக ஹிட்ஸ். நட்சத்திரக் குடும்பத்தில் இருந்து வந்தாலும், இந்தப் புகழுக்காக அலியா பட்ட சிரமங்கள் அதிகம். 23 வயதாகும் அலியாவின் எடை இப்போது 52 கிலோ. நடிப்பதற்கு வருவதற்கு முன்னர் அவரது எடை 68 கிலோ. முதல் பட ஆடிஷனில் அலியாவைக் கவனித்த இயக்குநர் கரன் ஜோஹர் `உன் வெயிட்டைக் குறைத்தால் நீ நடிக்கலாம்’ என்றிருக்கிறார். நடிகை ஆவதே அலியாவின் கனவு. பாலிவுட்டின் முக்கிய இயக்குநர் படத்தில் அறிமுகமாகும் வாய்ப்பு. ஆனால், தனது எடையே பிரச்னை என்றதும் நொறுங்கிவிட்டார். முதலில் எடையைக் குறைத்துவிட்டு பிறகு ஆடிஷனுக்குப் போயிருக்க வேண்டும் என தன்னைத்தானே நொந்துகொண்டார். ஆறே மாதங்களில் 16 கிலோ குறைத்து, அந்த வாய்ப்பைப் பெற்றார். இதோ, இப்போது இந்திய இளைஞர்களின் டிரீம் கேர்ள், பிஸி... பிஸி... பிஸி. இந்த ‘வெயிட் லாஸ் ஜர்னி’ பற்றி என்ன சொல்கிறார் அலியா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்