நஞ்சு முறிக்கும் அவுரி

நீலி எனப்படும் குறுஞ்செடி வகையைச் சேர்ந்த அவுரி, பல மருத்துவப் பலன்களைக்கொண்டது. சிறந்த நஞ்சு நீக்கி. முற்காலத்தில் விவசாய நிலங்களில் அவுரியைப் பயிரிட்டு மண்ணில் இருக்கும் நச்சுகளை அகற்றுவார்கள். அவுரி இலையும் வேரும் பல்வேறு வகையில் பயன்படுபவை.

“உரிய லவுரித் துழைத்தான் ஒதுபதினெண்

அறிய நஞ்சைத் தின்றவர்க்கும் ஆகும் - தெரிவரிய

வாத வெப்பு காமாலை மைந்தர்குறு மாந்தஞ்

சீதம் அகற்றும் தெரி”


என அவுரியைப் பற்றி சொல்கிறது அகத்தியர் குணவாகடம்.

பதினெட்டு வகையான நச்சுக்களை முறிக்கும் ஆற்றல் கொண்டது அவுரி. இதன் இலையைக் குடிநீரில் போட்டுக் குடித்துவந்தால், வாதத்தால் ஏற்படும் காய்ச்சல், காமாலை, மாந்தம், மூட்டுகளில் ஏற்படும் வாத நோய்கள் நீங்கும்.

அவுரி இலை குடிநீரைத் தொடர்ந்து குடித்துவந்தாலோ, இலையை வேகவைத்து வதக்கிச் சாப்பிட்டுவந்தாலோ, உடல் பொன்னிறமாகும். வயிற்றில் இருக்கும் புழுக்கள் அழியும்.

அவுரிக்கு மலத்தை இளகச்செய்யும் ஆற்றல் உள்ளதால், மலச்சிக்கல் போக்க சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. தொடர்ந்து அவுரி குடிநீர் அருந்தி வந்தால், மாலைக்கண் நோய் நீங்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்