வாயை மூடி பேசவும்...

வாய் துர்நாற்றம், பல் மருத்துவர்கள் தினம் தினம் சந்திக்கும் மிக மோசமான நிகழ்வு.  ஒருவரோடு ஒருவர் பேசும்போது எழும் முக்கிய பிரச்னை இது. துர்நாற்றத்தின் காரணமாக, `இவர்களோடு பேசியிருக்க வேண்டாமே’ என்றுகூட சமயத்தில் தோன்றும். அதே நேரம், முகம் சுளித்தாலோ, பேசாமல் தவிர்த்தாலோ, அவர்கள் காயப்பட்டுவிடுவார்கள்.

சமீபத்தில் வாய் துர்நாற்றத்தால் விவாகரத்து வரைக்கும் சென்ற தம்பதியருக்கு, விவாகரத்துக்குப் பதிலாக ஒரு டாக்டர் தீர்வு அளித்தார். சின்னத் தீர்வுதான். ஆனால், அவர்களின் வாழ்க்கையையே புதுப்பித்தது. `உங்கள் மீது வியர்வை நாற்றம் அடிக்கிறது, வாய் துர்நாற்றம் வீசுகிறது’ என்று நாம்  வெளிப்படையாக இன்னொருவரிடம் சொல்ல முடிவது இல்லை. இதை சொல்லாததன் மூலம் நாம் அவருக்கு கெடுதலைத்தான் செய்கிறோம். அதை அவரிடம் சொல்லி, தகுந்த மருத்துவரைப் பார்க்க ஆலோசனை வழங்குவதன் மூலம், அந்தப் பிரச்னை சில நாட்களிலேயே தீர்ந்துபோகும்.

வாய் துர்நாற்றம் ஏன் வருகிறது?

ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. இருப்பினும், வாய் மற்றும் வயிறு தொடர்பான பிரச்னையால்தான் பெரும்பாலும் வாய் துர்நாற்றம்   ஏற்படுகிறது. சொத்தைப் பல், காரைப் பற்கள், கடைவாய்ப் பற்கள் பாதி முளைத்து இருப்பது, ஈறு நோய்கள், டான்சில்ஸ், சைனஸ் போன்றவை இருந்தாலும் துர்நாற்றம் வரலாம். நுரையீரல் தொற்று, அதிகப்படியான சளி, வாய், வயிற்றுப்புண், அஜீரணம், கல்லீரலில் பிரச்னை, வாயுத் தொல்லை, சில மாத்திரைகளை உட்கொள்வதால் வாய் வறட்சியாவது, மூக்கடைப்பால் வாய் திறந்து தூங்கும்போது உமிழ்நீர் சுரப்பிகளில் பிரச்னை, குறைவாக உமிழ்நீர் சுரத்தல், தூக்கத்தில் வாய் திறந்து தூங்கும் பழக்கம் போன்ற காரணங்களாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும்.

உணவுகளும் துர்நாற்றமும்

தினமும் இரண்டு முறை பிரஷ் செய்பவர்களாக இருந்தாலும் துர்நாற்றம் இருக்கலாம். எதனால் பிரச்னை என மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். இவர்கள், உணவில் அதிக அளவில், வெங்காயம், பூண்டு சேர்ப்பதால்கூட வாய் துர்நாற்றம் ஏற்படும். எண்ணெயில் பொரித்த உணவுகளை உண்பது, அடிக்கடி காபி குடிப்பது, சீஸ், கருவாடு போன்றவற்றைத் தவிர்க்கலாம். வாயுத் தொல்லைக்காக கோலா பானங்களை அடிக்கடி அருந்துவோருக்கு துர்நாற்றம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அதுபோல், மதுப் பழக்கம், புகைப்பழக்கத்தைத் தவிர்ப்பதும் அவசியம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்