சுவை உணர்க

பார்த்தல், கேட்டல், சுவைத்தல், நுகர்தல், தொடுதல் என்ற ஐந்து புலன்களால் நம் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறது.  இதில், நுகர்தல் மற்றும் சுவை உணர்வு இல்லாமல் போனால் எப்படி இருக்கும்? நமக்கு எல்லாம் வீட்டில் குழம்பு தாளிக்கும்போதே பசிக்க ஆரம்பித்துவிடும். சாலையில் செல்லும்போது சிக்கன் பிரியாணி வாசனை ஆளை இழுக்கும். ஆனால், எந்த வாசனை என்றே உணர முடியாமல், என்னதான் சுவையான உணவைச் சாப்பிட்டாலும், ஏதோ ஒன்றைச் சாப்பிட்டோம் என்ற உணர்வு இருந்தால் என்ன செய்வோம்?

வாசனை உணர்வுக்கும் சுவை உணர்வுக்கும் தொடர்பு உள்ளது. நாம் சாப்பிடும்போதும், பருகும்போதும், உணவை அசைபோடும்போதும் உணவில் இருந்து வெளிப்படும் மூலக்கூறுகள், நம் வாய் மற்றும் தொண்டைப் பகுதியில் உள்ள சுவை உணர்வு செல்களைத் தூண்டும். இந்த சுவை உணர்வு செல்கள் வாயின் உட்புறமும், நாவின் சுவை மொட்டுகளிலும், உள் தொண்டையின் மேற்பரப்பிலும் குவிந்திருக்கும். பிறக்கும்போது, நமக்கு 10,000 சுவை மொட்டுகள் இருக்கும். வயதாக, வயதாக அவற்றின் எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும். சுவை உணர்வின் செல்கள் தூண்டப்படும்போது, நரம்புகள் வழியே அந்தச் செய்தி மூளைக்குக் கடத்தப்பட்டு, மூளையால் அந்தச் சுவை உணரப்படுகிறது. காரம், உப்பு, புளிப்பு, துவர்ப்பு, இனிப்பு, கசப்பு என ஆறு சுவைகளையும் இந்தச் சுவை மொட்டுக்களாலேயே உணர முடியும்.  இப்படி, சுவை அறியும் திறனில் ஏற்படும் பிரச்னையை ‘டேஸ்ட் டிஸ்ஆர்டர்’ என்கிறோம்.

டேஸ்ட் டிஸ்ஆர்டர்

பொதுவாக, ‘பேய் ருசியுணர்வு’ எனப்படும் `பேன்டம் டேஸ்ட் பெர்சப்ஷன் (Phantom taste perception) பிரச்னைதான் பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும் சுவைக்குறைபாடு். அதாவது, வாயில் ஏதும் இல்லாதபோதுகூட விரும்பத்தகாத ருசியுணர்வு இருந்துகொண்டிருக்கும். இதைத் தவிர இனிப்பு, புளிப்பு, கசப்பு என்று அறுசுவை உணர்வு மிகக் குறைவாக இருக்கும். இதை ஹைப்போக்யூசியா (Hypogeusia) என்கிறோம். சிலருக்கு எந்த சுவையுமே தெரியாது. இதை  அக்யூசியா (Ageusia) என்கிறோம். இதுதவிர, டிஸ்க்யூசியா (Dysgeusia) என ஒரு வகை பிரச்னை உள்ளது. இவர்களுக்கு எப்போதுமே வாயில் கெட்டுப்போன, மிகவும் மோசமான உணவைச் சுவைத்த உணர்வு இருக்கும். சிலருக்கு வாய் எரிச்சலாக இருப்பதுபோல இருக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்