இனி எல்லாம் சுகமே - 20

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
செரிமானம் அறிவோம்!

“நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை, உபத்திரவம் கொடுக்காமல் இருந்தால் போதும்” எனச் சொல்வார்கள். இந்த வாக்கியம் பித்தப்பைக்கு அப்படியே பொருந்தும். கல்லீரலுக்குக் கீழே பேரிக்காய் வடிவில் இருக்கிறது பித்தப்பை. சுமார் நான்கு இன்ச் அளவில் இருக்கும் இந்த உறுப்பு செரிமானத்துக்கு உதவக்கூடியது. மிகவும் முக்கியமானது.  பித்தப்பை ஒழுங்காகச் செயல்பட்டால் மட்டுமே உடலில் இருக்க வேண்டும். இல்லையெனில், அறுவைசிகிச்சை செய்து அகற்ற வேண்டியதுதான். உலகில் அதிகம் செய்யப்படும் அறுவைசிகிச்சைகளில் பித்தப்பை நீக்க அறுவைசிகிச்சையும் ஒன்று.

பித்த நீரின் முக்கியத்துவத்தை நம் முன்னோர்கள் அப்போதே உணர்ந்து வைத்திருந்தார்கள். அதனால்தான் வாதம், கபம், பித்தம் என மூன்றையும் வைத்து உடல்நிலையைக் குறிப்பிட்டு, மருத்துவம் பார்த்தார்கள்.

சரி, பித்தப்பையின் வேலை என்ன?

கல்லீரலில் பித்த நீர் உருவாகிறது. இது சேமிக்கப்படும் இடம்தான் பித்தப்பை. நாம் சாப்பிடும் உணவு, இரைப்பையில் அரைக்கப்பட்டுக் கூழாக, சிறுகுடலின் டியோடினத்துக்கு வருகிறது. உணவில் இருக்கும் மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து ஆகியவற்றைப் பொறுத்து, உடனடியாக கணையத்தில் இருந்து என்சைம்கள் சுரந்து, டியோடினத்தில் விழும். உணவில் உள்ள கொழுப்பை செரிமானம் செய்ய, கோலிசிஸ்டோகைனின் என்ற ஹார்மோன் உடனடியாகச் சுரந்து, ‘கொழுப்பு வந்தாச்சு, பித்த நீரை வெளியிட வேண்டும்’ என மூளைக்கு தகவல் செல்லும். மூளையில் இருந்து உத்தரவு வந்ததும், பித்தப்பையில் இருந்து தேவையான பித்த நீர் வெளிப்பட்டு, பித்தநாளம் வழியாக டியோடினத்துக்கு வரும். கொழுப்பு தண்ணீரில் கரையாது என்பதால், பித்த நீரில் இருக்கும் உப்புகளால் உறிஞ்சப்பட்டு, சிறுகுடலில் செரிமானம் ஆகிறது. பித்த நீர் உற்பத்தி செய்யப்படாவிட்டாலோ, பித்தப்பையில் ஏதாவது கோளாறு ஏற்பட்டு, பித்தநீர் சரியாக வெளிவராவிட்டாலோ சிக்கல்தான். செரிமானம் தடைப்படுவதுடன் பித்தப்பையில் கற்களும் உருவாகும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்