தடுப்பூசிகள் - கம்ப்ளீட் கைடு

டுப்பு மருந்துகளால் மனித இனம் பெற்ற நன்மை சொல்லில் அடங்காதவை. தடுப்பூசிகள் போடாதவர்கள் தற்போது மிகமிகக் குறைவு என்றாலும், இத்தனை ஆண்டுகளாக, விழிப்புஉணர்வு ஏற்படுத்தியும் தடுப்பூசி குறித்த தவறான கருத்துகள் சமூகத்தில் உலவவே செய்கின்றன. ‘வந்த பின் அவதிப்படுவதைவிட வருமுன் காப்பதே மேல்’ என்ற அடிப்படையிலேயே இந்தத் தடுப்பு மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. தடுப்பூசி பற்றிய பொதுவான சில நம்பிக்கைகளையும் உண்மையையும் பற்றிப் பார்ப்போம்.

நம்பிக்கை 1: ஆரோக்கியமான, சுகாதார சூழலே தொற்றுநோய்களைத் தடுத்துவிடும். இதனால், தடுப்பூசி போடுவது தேவையற்றது.

உண்மை 1: எவ்வளவு சுத்தமாக, சுகாதாரமாக இருக்கிறோமோ, அந்த அளவுக்கு தொற்றுநோய்கள் ஏற்படுதற்கான வாய்ப்பு குறைகிறது. ஆனால், முற்றிலுமாக வாய்ப்பு இல்லை என்று சொல்வதற்கு இல்லை. சில தொற்றுநோய்கள் மிக வேகமாக பரவிப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. ஏதாவது ஒரு சூழலில் தொற்றுநோய்க் கிருமி பரவி பாதிப்பை ஏற்படுத்தலாம். மேலும், தடுப்பூசி அளித்ததன் மூலமே, போலியோ, பெரியம்மை உள்ளிட்ட பல வியாதிகளை இல்லாமல் செய்திருக்கிறோம். தடுப்பூசி அளிக்கத் தவறினால், இந்த பாதிப்புகள் மீண்டும் ஏற்படலாம்.

நம்பிக்கை 2: தடுப்பூசிகள் மோசமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். மேலும் உயிரிழப்பைக்கூட ஏற்படுத்தலாம். இதன் பக்கவிளைவுகளைப் பற்றி இன்னும்கூட முழுமையாக அறிந்திருக்கவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்