உறுதியான எலும்புகள் 40 வயதிலும்!

40 வயதை கடந்தவர்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு ஏற்படும் முக்கியப் பிரச்னைகளில் ஒன்று, எலும்பு பலவீனம். மார்பகப் புற்றுநோய், மூளை நரம்புகளில் ஏற்படும் நோய்களைவிட எலும்பு பலவீனம்தான் பெண்களுக்கு அதிக அளவில் ஏற்படுகிறது. பெண்களில் 50 சதவிகிதம் பேர் எலும்பு பலவீனம் காரணமாக எலும்பு முறிவு, ஆஸ்டியோபொரோசிஸ் என்ற எலும்பு அடர்த்திக் குறைதல் போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்படுகிறார்கள்.

எலும்பு பலவீனம் ஏன் ஏற்படுகிறது?

இளம் வயதில் கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுஉப்புக்களை கிரகித்து எலும்பு செல்கள் உருவாகின்றன. பழைய செல் மறைவதும், அந்த இடத்தை பூர்த்தி செய்ய புதிய செல்கள் உருவாவதும் தினசரி நடப்பவைதான். வயது அதிகரித்தல், ஹார்மோன் மாற்றங்கள்,  ஊட்டச்சத்து குறைபாடு, மது, புகை பழக்கம் உள்ளிட்ட சில காரணங்களால் புதிய செல்கள் உருவாவது பாதிக்கப்படும். இதனால், எலும்பு அடர்த்தி குறைதல் நோய் ஏற்படுகிறது.

ஹார்மோன் மாற்றத்தால்.  ஆண்களை விட பெண்களுக்கு இந்தப் பாதிப்பு அதிகம். 35 வயதுக்குப் பின், ஒரு பெண்ணுக்கு ஒவ்வொரு ஆண்டும் 0.3 சதவிகிதம் என்ற அளவில், எலும்பு அடர்த்திக் குறையும். 60 வயதுக்குள், 30 முதல் 35 சதவிகிதம் எலும்பின் அடர்த்தி குறைகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்