அலர்ஜியை அறிவோம் - 20

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
கண் ஒவ்வாமை

டலின் வெளிப்புற உறுப்புகளில் சருமத்துக்கு அடுத்தபடியாகக் கண்களில்தான் அதிக ஒவ்வாமை ஏற்படுகிறது. மாசடைந்த சுற்றுச்சூழல், காற்றில் கலந்துவரும் மகரந்தம், வாகனப் புகை, சிகரெட் புகை, பலவகை தூசுகள் போன்றவை ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன. அடுத்தபடியாக, கண்ணில் விழும் வேதிப் பொருட்கள், நச்சுப் பொருட்கள், கிருமிகள், அழகுசாதனப் பொருட்கள், முடிச்சாயம், மருந்து, வீட்டு விலங்குக் கழிவுகள், தூசு உண்ணிகள் (Dust Mites), கான்டாக்ட் லென்ஸ், பூச்சிக்கடி போன்றவையும் ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன.

என்ன காரணம்?

கண் இமைக்கு உட்புறம், விழிவெண்படலம் மற்றும் கண்ணைச் சுற்றி உள்ள பகுதிகளில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மாஸ்ட் (Mast) அணுக்கள் உள்ளன. உடலுக்கு ஒவ்வாத ஒரு பொருள் கண்ணில் விழும்போது, அந்தப் பொருளை வெளியேற்ற ‘இம்யூனோகுளோபுலின் இ’ (IgE), ஐஜிஏ (IgA), அல்லது ஐஜிஎம் (IgM) எனும் எதிர்ப் புரதம் ரத்தத்தில் உருவாகிக் காத்திருக்கும். மீண்டும் அதே ஒவ்வாத பொருள் உடலுக்குள் நுழையும்போது, இது அதனுடன் கலந்து, வினைபுரிந்து, மாஸ்ட் செல்களைத் தூண்டும். இதன் காரணமாக, மாஸ்ட் செல்கள் ‘ஹிஸ்டமின்’, ‘லுயூக்கோட்ரின்’ (Leukotriene) எனும் வேதிப்பொருட்களை வெளியேற்றும். இவை, ரத்தக்குழாய்களை விரிவடையச் செய்து, அங்கு உள்ள நரம்புமுனைகளைத் தாக்கும். அதன் விளைவால், கண்ணில் அரிப்பு ஏற்படுவது, நீர் வடிவது உள்ளிட்ட ஒவ்வாமைக் குணங்கள் உண்டாகின்றன. கண் ஒவ்வாமையில் நான்கு வகை எதிர்வினைகள் ஏற்பட்டு, பலதரப்பட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. அவற்றில் முக்கியமான சிலவற்றை மட்டும் இங்கே காண்போம்.

இமை ஒவ்வாமை

கண் ஒவ்வாமையின் முக்கிய அறிகுறி, இமை வீக்கம். இது திடீரெனத் தோன்றும். ஒரு கண்ணிலோ இரண்டு கண்களிலோ ஏற்படலாம். வீக்கத்தில் அரிப்பு உண்டாகலாம், ஆனால் வலி இருக்காது. வீக்கத்தைத் தொட்டால், அந்த இடத்தில் குழி விழும். பெரும்பாலும், ஒவ்வாமைத் தோல் அழற்சி (Atopic Dermatitis) காரணமாக இமை வீக்கம் ஏற்பட்டால், தோல் சிவந்து தடிக்கும். அரிப்புடன்கூடிய கொப்புளங்களும் நீர்க்கசிவும் காணப்படும். கொப்புளங்கள் சரியானதும் பக்கு கட்டி, தோல் உரியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்