மருந்தில்லா மருத்துவம் - 21

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
கர்ப்பக்காலம்

ருவில் சுமக்கும் குழந்தை மிகவும் ஆரோக்கியமாக, சுகப்பிரசவமாக பிறக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொரு தாயும் விரும்பவாள்.  ஆனால், சில குழந்தைகள் பிறவிக் குறைபாட்டுடன் பிறக்கின்றன. இது ஏன் ஏற்படுகிறது? இதற்குத் தீர்வு உண்டா? இதற்கான விடையைக் கண்டுபிடிக்க தாயின் கர்ப்பக் காலத்தைப் பார்க்க வேண்டும்.

கருவுற்ற தாய், சிசுவை கர்ப்பப்பையில் சுமக்கிறாள். இந்தக் காலகட்டத்தில் தாய் ஆரோக்கியமான, மகிழ்ச்சியான மனநிலையில் இருக்க வேண்டும். ஆரோக்கியம் குறைந்து, மருந்து மாத்திரைகள் சாப்பிடும்போது, கர்ப்பப்பை சில நேரங்களில் வலுவிழக்கிறது. இது, கர்ப்பப்பையில் இருக்கும் சிசுவின் ரத்தத்தில் சேர்ந்து, குழந்தையின் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது.

இ்ந்தக் காலத்தில் பிறக்கப்போகும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறதா என்று பரிசோதனை செய்துகொள்கிறார்கள். பயத்துடனே கருவைச் சுமக்கிறார்கள். இந்த பயமே கர்ப்பப்பை பலவீனமாகக் காரணமாகிறது. வீட்டுச் சண்டை களில், தாயின் மனது பாதிக்கப்படுகிறது. தாயின் மனநிலை கருவையும் பாதிக்கும். குழந்தையின் உயிருக்கு எப்படி தாயின் ரத்தத்தில் இருக்கும் ஊட்டச்சத்து உதவுகிறதோ, அதேபோல் தாயின் மனநிலை சிசுவின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால்தான், கர்ப்பிணிகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்லியுள்ளனர்.

தாய்க்கும் சிசுவுக்குமான இந்தத் தொடர்பை புரிந்துகொள்ள, நாம் உடலை நன்கு அறிய வேண்டும். குழந்தையானாலும் பெரியவராயினும் உடலின் ஆராவில் ஏழு சக்கரங்கள் உள்ளன. தாயின் வயிற்றில் இருக்கும்போதே, இந்த ஏழு சக்கரங்கள் மலரின் மொட்டு போன்று தோன்றுகின்றன. ஆனால், இவை யாவும் கர்ப்பப்பைக்கு உள்ளிருக்கும்போதே மலர்வது இல்லை. உயிருக்கு ஆதாரமான மூலாதாரச் சக்கரம் மட்டுமே, கருவின் ஏழாவது மாதத்தில் மலரத் தொடங்குகிறது. இதுதான் குழந்தை உயிருடன் பிறப்பதற்குக் காரணம். இந்தப் பருவத்தில் ஐம்புலன்களில் ஒன்றான செவி வேலைசெய்யத் தொடங்குகிறது. தாயின் கர்ப்பப் பையில் வளரும் சிசுவால், தாயின் வேதனையை அறிய முடியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்