சர்க்கரையை வெல்லலாம் - 21

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சர்க்கரை நோய் - நம்பிக்கைகள் Vs உண்மைகள்நவம்பர் 14 - உலக சர்க்கரை நோய் விழிப்புஉணர்வு தினம்ஹெல்த்

21 -ம் நூற்றாண்டில், உலகின் மிகப் பெரிய தொற்றாநோயாக உருவெடுத்துவருகிறது சர்க்கரைநோய். ஒவ்வோர் ஆண்டும் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. கடந்த ஆண்டின் புள்ளிவிவரப்படி, உலக அளவில் 41.5 கோடி சர்க்கரை நோயாளிகள் உள்ளனர். 2040-ம் ஆண்டில் இது 64.2 கோடியாக அதிகரித்துவிடும். அதாவது, உலகில் பத்தில் ஒருவர் சர்க்கரை நோயாளியாக இருப்பார்.

சர்க்கரை நோயாளிகள் ஒருபக்கம் என்றால், உலகில் 31.8 கோடி பேர் சர்க்கரை நோய் ஏற்படக்கூடிய நிலையில் உள்ளனர். இவர்கள் முறையான சிகிச்சை, வாழ்க்கைமுறை மாற்றத்தைப் பின்பற்றவில்லை எனில், இவர்களுக்கு விரைவிலேயே சர்க்கரைநோய் வந்துவிடும் ஆபத்து உள்ளது. ஆனால், தங்களுக்கு இந்த பாதிப்பு இருக்கிறது என்பதையே அறியாமல் இவர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் அதிர்ச்சியான விஷயம்.

இந்தியாவில் 6.9 கோடி பேர் சர்க்கரை நோயாளிகள். இது 2040-ம் ஆண்டில் 12.3 கோடியாக அதிகரிக்கும் எனக் கணிக்கிடப்பட்டுள்ளது. சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க, போதிய விழிப்புஉணர்வு இல்லை என்பதே முக்கியக் காரணமாக இருக்கிறது. அனைவரிடமும் சர்க்கரைநோய் பற்றிய விழிப்புஉணர்வைக் கொண்டு சேர்ப்பதன் மூலம், சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்