குழந்தைகளை சாப்பிடவைக்க 10 வழிகள்!

டம்பிடிக்கும் குழந்தைகள் இல்லாத வீடு இருக்கிறதா? அதுவும் அம்மாக்கள் சமைத்து ஊட்டிவிடுவதை, சாந்தமாக,  சீராகச் சாப்பிடும் குழந்தைகளின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம். சரியான உணவுதான் ஆரோக்கியம் தரும்; நோய் எதிர்ப்புச் சக்தியை உண்டாக்கும். ஆனால், அடிப்படையான உணவு உண்பதிலேயே பிரச்னை என்றால், என்ன செய்யலாம்?

*வீட்டில் தயாரித்த உணவை ஊட்டிவிடுவதே குழந்தைக்காகப் பெற்றோர் செய்யும் முதல் ஆரோக்கிய வழி. முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால். ஆறு மாதத்திலிருந்து தாய்ப்பாலுடன் கேழ்வரகுக் கஞ்சி, அரிசிக் கஞ்சி செய்து தரலாம்.

*ஒவ்வொரு வேளைக்கும் ஓர் உணவை அறிமுகப்படுத்த வேண்டும். காலையில் இட்லி, பொங்கல், கேசரி, கிச்சடி போன்றவை. மதியம் சாதம், பருப்பு, காய்கறிகள், மசித்த கேரட், உருளைக்கிழங்கு, சாம்பார், ரசம், தயிர் சாதம், மோர் சாதம். மாலையில் ஆப்பிள், பப்பாளி, சப்போட்டா, வாழைப்பழம் கொடுக்கலாம். ஒன்பது மாதங்கள் முடிந்தவுடன், முட்டையின் மஞ்சள்கரு கொடுக்கலாம். இந்த உணவுகளை மசித்துக் கொடுக்க வேண்டும்.

*ஒரு வயதுக்குப் பின் முட்டையின் வெள்ளைப் பகுதி, பசும்பால் கொடுக்கலாம். சில குழந்தைகளுக்கு பாலில் உள்ள புரதம் அலர்ஜியை ஏற்படுத்தி, ஆஸ்துமா, வயிற்றுப்போக்கு ஏற்படலாம். இவர்கள் பசும்பாலைத் தவிர்க்க வேண்டும்.

*ஒரு வயதுக்குப் பிறகு, அனைத்து உணவுகளையும் கொடுக்கலாம்.  பற்கள் முளைக்க ஆரம்பித்ததுமே, அவர்களாக எடுத்துச் சாப்பிட வைக்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்