நீண்ட வாழ்வு தரும் உணவுப் பழக்கம்

வ்வளவு காலம் வாழ வேண்டும் என்று நிர்ணயிக்கும் தன்மை நம் கையில் இல்லை. ஆனால், நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்வதற்கான வழிகள் இருக்கிறதா என்றால் இருக்கிறது. உடற்பயிற்சி, துடிப்பான வாழ்க்கை முறையுடன், எதை, எப்படி, எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பது நம்முடைய ஆயுளை அதிகரிக்கச் செய்கிறது என நீண்ட காலம் வாழ்பவர்களை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அவர்கள், நீண்ட காலம் வாழ, முதுமையைத் தாமதப்படுத்தும் சில உணவுகளைப் பட்டியலிட்டுள்ளனர்.

*எந்த உணவில் அதிகமான நுண்ணூட்ட சத்துக்களும் குறைவான கலோரிகளும் உள்ளதோ அந்த வகை உணவுகளை உண்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும். புரொகோலி சாலட், திராட்சை உள்ளிட்ட பல காய்கறிகள், பழங்கள் இப்படி உள்ளன. இவை பலவகை புற்றுநோய் வராமல் காக்கும் திறன் கொண்டவை.

*நல்ல கொழுப்பு நிறைந்தது நல்லெண்ணெய். இது, இதய நோய்கள் வராமல் தடுக்கும். அதேசமயம் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். தினமும் 2 டீஸ்பூன் நல்ல எண்ணெயை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

*சிவப்பு நிற காய்கறி, பழங்களான தக்காளி, மாதுளை, சிவப்பு கொய்யா போன்ற உணவுகளில் லைக்கோபீன் சத்து இருப்பதால் சிலவகை புற்றுநோய்களிலிருந்து தப்பிக்கலாம்.

*பீன்ஸ் வகை உணவுகளான பீன்ஸ், அவரை, துவரை, காராமணி, கிட்னி பீன்ஸ் போன்றவற்றில்  ஃபேட்டி ஆசிட் புட்டிரேட் (fatty acid butyrate) சத்து உள்ளதால் ஊட்டச்சத்து குறைபாட்டால் நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறையும்.

*நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள், சிறுதானியங்களை உண்டால் கழிவுகள் வெளியேறி மலச்சிக்கல் இருக்காது. இதனால் சர்க்கரை நோய், இதய நோய், உடல்பருமன், ரத்தஅழுத்தம் ஆகியவை வராமல் தடுக்கலாம். ஃபோலிக் அமிலம் இருப்பதால், உடலில் செல்சிதைவு ஏற்படாமல் தடுக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்